S.L.பைரப்பாவின் திரை(Avarana)

எனக்கு எஸ்.எல்.பைரப்பாவின் மீது ஒரு முழுப் பிடிமானம் வந்து விட்டது.வரலாற்றை திருப்பி விசாரிக்கும் இந்த நாவல் முன் வைப்பது நம் முன் உள்ள  வரலாறு என்பது முழுக்க உண்மையானதா? 


"வரலாற்று பொய்களை முன்வைப்பதன் மூலம் தேசியவாதத்தை ஒருபோதும் வலுப்படுத்த முடியாது" என்கிறார் எஸ்.எல்.பைரப்பா.

இஸ்லாம் அடிப்படை வாதத்தை,இஸ்லாம் மன்னர்கள் இந்திய பண்பாட்டுச் சின்னங்களை பாரம்பரியத்தை சிதைத்ததை வெறும் குற்றச்சாட்டாக முன் வைக்காமல் வலுவான தரவுகளை கொண்டு எஸ்.எல்.பைரப்பா எழுதியுள்ளார்.



நாவலின் கதாபாத்திரங்களை மட்டும் புனைவுகளாக கொண்டு உள்ளபடியே இருந்த வரலாற்றுத் தகவல்களை கொண்டு மெய்த்தன்மையிலிருந்து விலகி எழுதப்பட்ட வரலாறுகளின் மீதுள்ள திரையை ஒரு பெரும் விவாதத்தின் வழியே விலக்கும் முயற்சியே இந்த நாவல் என கொள்ளலாம்.இதில் மதச்சார்புத்தன்மை உள்ளது, இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட நாவல் என எடுத்துக் கொள்ளவும் வாசிக்கும் ஒரு சிலருக்கு வாய்ப்புள்ளது.அது அவரவர் பார்வை பொறுத்தது.

இந்த நாவலில் அமீரும்,லட்சுமியும்(ரஷியா) இருவரும் இஸ்லாமிய இந்து கலாச்சார விவாதங்களின் குறியீடுகள்.

சமகாலத்தின் கதையையும், அக்பர் ஒளரங்கசீப் காலத்தின் வரலாற்று கதையையும் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிச் செல்லும் இந்த நாவல் இந்திய கலாச்சாரத்தை, இந்திய பண்பாட்டை, இந்திய கோயில்களை சிதைத்த இஸ்லாமிய மன்னர்களின் சகிப்பற்ற மதவெறியை,வரலாறு மறைத்த உண்மையான வரலாற்றை வலுவான தரவுகளாக முன்வைக்கிறது.

இஸ்லாமிய மன்னரால் சிறைபிடிக்கப்படும் ராஜஸ்தானத்து இளவரசன் ஒருவனை விதை நசுக்கி அவனை அலியாக்கி அந்தபுரத்து பெண்களிடம் விடும் ஒரு வித கொடூர செயல் இஸ்லாமியர்கள் இந்து மதத்தின் மீது நிகழ்த்திய ஒரு வித சீரழிவின் குறியீடாக நாவல் சொல்கிறது.



சரித்திரப் புள்ளி விவரங்களில் எனது சொந்தக் கற்பனை எதுவும் இல்லை எனும் S.L.பைரப்பா நமது முன்னோர்களின் எந்தெந்தச் செயல்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்த சாதனைகளினால் கவரப்படவேண்டும் என்கிற விவேகம் இல்லாமல் இருந்தால் நாம் வளருவதில்லை. சரித்திரத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்வது போலவே, அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதும் ஒரு முதிர்ச்சியின் அறிகுறி. இது ஒவ்வொரு மதம், ஜாதி, குழுக்களுக்கும் பொருந்தும் ஒரு வாசகம்" என்கிறார்.

S.L. பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலுக்கு நேர் எதிரான ஒரு களம் கொண்டது திரை நாவல்.

ஒரு குடும்பம் சிதைகிறது தன்னுடைய சொந்த வாழ்வின் பாதிப்புகளிலிருந்து எழுதப்பட்ட ஒரு செவ்வியல் படைப்பு.

திரை நாவல் வரலாற்றை மட்டும் அல்ல அதன் வழியே இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாதத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இது ஒரு வித சமநிலையற்ற தன்மையான நாவல் என்று ஒரு எண்ணம் எழுந்தாலும் உண்மையில் இது மத சமநிலைப் பேண போலியாய் நிறுவப்பட்ட வரலாற்றின் மீதுள்ள திரையை விலக்க முயற்சிக்கும்  கலை செயல்பாடு இந்த நாவல்.




Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்