காதுகள்-எம்.வி.வெங்கட்ராம்

 ஒவ்வொரு மனித உடலின் அகத்திற்கும் புறத்திருக்கும் ஒரு போர் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.



நான் சில தருணங்களில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பேருந்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஐம்பது அல்லது அறுபது வயதை கடந்த ஒரு நபர் தொடர்ச்சியாக அவரே அவருக்குள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்திருக்கிறேன்.


என் அப்பா கொஞ்ச காலம் உள அழுத்த பாதிப்பில் இருந்த போது அவரும் இப்படி தனியாக முனுமுனுத்து அவருடனயே பேசிக் கொண்டிப்பதை கண்டிருக்கிறேன்.


புற இரைச்சல்களும்,புற வாழ்வின் அழுத்தங்களும் தான் அகச் சிதைவிற்கு வழி வகுக்கிறது.


காதுகள் நாவல் ஒரு தனிமனிதனின் காது பிரச்சனையின் வழியே முன்வைப்பது பொது மானுட உளப் பிரச்சனைகளைத் தான்.


ஒருவனின் தேக பிரச்சினையையும் கலையாக்குது தான் நல்ல இலக்கியம். காதுகள் நாவல் அந்த வகையான ஒரு நல்ல இலக்கிய படைப்பு எனலாம்.


Hallucination என்ற பிரச்சினையினால் ஒருவனின் அகச்சந்தைக்குள் நிகழும் சிக்கல்களையும்,புற வாழ்வின் லெளகீக சிக்கல்கள்,மகாலிங்கத்தை எப்போதும் உடல் வறுத்தி நிற்கும் மகா காமம் என எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் கடந்த வாழ்க்கைகளின் நிகழ்வு கதம்பங்களின் தொகுப்பு எனவும் இந்நாவலை பார்க்கலாம்.



எழுத்தாளர் K.N.செந்தில் கூறியது உண்மை தான்.சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் கதை காதுகள் நாவலின் கதை.எவரும் கவனிக்காத ஒரு இலக்கியப் படைப்பு என்றால் கூடப் பரவாயில்லை.சாகித்திய அகடாமி விருது வாங்கிய ஒரு நாவலை மாவீரன் படத்தின் இயக்குனர் படிக்காமல் போக வாய்ப்பில்லை.எந்த வித அறமும் இல்லாமல் நடக்கும் அறிவுத் திருட்டு இது.ஏன் திரைப்படம் ஆரம்பிக்கும் போது இந்த கதை இந்த எழுத்தாளரின் கதை பாதிப்பில் உருவானது என்று பதிவு செய்வதில் என்ன பிரச்சனை.எந்தவித தயக்கமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அறிவுச் சுரண்டல் நடக்கிறது.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்