நெருங்கி வரும் இடியோசை-விபூதி பூஷன் பாந்தோபாத்யாய



வங்க நாவல்களின் தனித்த சிறப்பே அதன் அமைதியும்,ஆழமும் தான்.போரினால் உருவாகும் பஞ்சத்தில் உழலும் மனிதர்களின் உணர்வுகளை அவ்வளவு ஆழமாக நம்முள் கடத்துகிறது நாவல்.நாவலின் பெரும் தரிசனமே இதில் வரும் பெண்கள் தான். கங்கா சரணின் மனைவி அனங்கா, காபாலியின் மனைவி காபாலி போம், மோத்தி முச்சினி, கங்கா சரணுக்கு அரிசி கொடுக்கும் நிபாரண் கோஷ் விதவை மகள் காந்தோ மணி என பஞ்சத்திலும் பிறரின் சங்கடங்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். வயிற்று பசிக்கும் அரிசிக்கும் போரா- ஜதுவிடம் செங்கல் சூளையின் பின்புறம் ஒதுங்கும் காபாலி போம் தனது தோழி அனங்காவுக்காக ஊரை விட்டு போரா- ஜதுவுடன் போகாமல் இருப்பது,பசியினால் கால்கள் வீங்கி இறக்கும் மோத்தி முச்சினி என பெண்களின் சித்திரம் இந்த நாவலில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. அவ்வளவு வறுமையிலும் அரிசிக்கு அலையும் நேரத்திலும் கங்கா சரண் அனங்காவை மூன்றாம் தரம் தாயாகி பிரசவிப்பதை ஒரே அத்தியாயத்தில் அது உடல் நிகழ்த்திக் கொள்ளும் இயற்கை தேவை என்பதை விபூதி பூஷன் பாந்தோபாத்யாய காட்டியுள்ளார்.வங்க நாவல்கள் எப்போதும் மிகச்சிறந்தவை, கலைத் தரம் கொண்டவை என்பதற்கு இன்னொரு உதாரணம் நெருங்கி வரும் இடியோசை.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்