தருமபுரியும் தாமஸ் மன்றோவும்:இடைப்பாடி அமுதன்

 சர் தாமஸ் மன்றோ அவர்கள் நிர்வாக ஆட்சியராக 1792ல் தர்மபுரிக்கு வருகை புரிந்தது முதல் 1799 வரை அவருக்கும் தருமபுரிக்கும் இருந்த ஏழாண்டு தொடர்பை விவரிக்கும் நூல் இது. 



ஒரு சாதாரண ராணுவ வீரனாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் சேருவதற்காக இந்தியா வந்த தாமஸ் மன்றோ இந்தியாவில் ஆட்சி புரிந்த மிகச்சிறந்த ஆங்கில ஆளுஞர்களில் ஒருவராக புகழ் பெற்றவர்.

பாரா மஹால் மாவட்டம் என அழைக்கப்படும் சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி,தர்மபுரி,ஈரோடு,கோவை போன்றவற்றை உள்ளடக்கியது.

1820 ல் தாமஸ் மன்றோ கொண்டு வந்த ரயத்வாரி முறையின் பரிசோதனை களம் தருமபுரி தான்.விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகவே அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே  நேரடியாக விலை நிர்ணயம் செய்யப்படும் முறையான ரயத்துவாரி முறை விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடியதாக இருந்தது. அதனால் மன்றோ விவசாயிகளின் நண்பர் என்று போற்றப்பட்டார்.

தருமபுரியிலிருந்து இருமத்தூர் ஆற்றில் பரிசலில் மீன் பிடித்த அனுபவத்தை இந்நூல் வழியே பகிர்கிறார் சர் தாமஸ் மன்றோ. மராத்தியரான லட்சுமணராவும், அப்போது உதவி கலெக்டராக இருந்த கிரகாமும் சேர்ந்து கிருஷ்ணகிரியின் புதிய நகரான தௌலதாபாத்தை உருவாக்கியதாக பதிவு செய்யப்படுகிறது தெளலதாபத்தில் தான் தற்போது நான் பணிபுரியும் துறையான பதிவுத்துறையின் மாவட்ட நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

53 வயதில் திருமணம் செய்து கொண்ட மன்றோ தன் தாய் நாடு திரும்பாமல் ஆந்திராவில் காலராவால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார். 

தாமஸ் மன்றோ  ஆட்சி புரிந்த காலத்தில் அவரால் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஒரு குளம் வெட்டப்பட்டுள்ளது அது இன்றும் தருமபுரியில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.



மன்றோவின் நினைவை போற்றும் வகையில் தர்மபுரியில் அவருக்கு ஒரு நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.


தர்மபுரியில் மன்றோ பணிபுரிந்த அந்த ஏழு ஆண்டு காலத்தின் வரலாற்று நினைவுகளை இந்த நூல் நமக்கு எடுத்துரைக்கிறது.


Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்