என் இலக்கிய நண்பர்கள்-எம்.வி.வெங்கட்ராம்

மைசூர் வெங்கடாஜலபதி வெங்கட்ராம் என்கின்ற எம்.வி. வெங்கட்ராம் காதுகள் நித்தியக்கன்னி வேள்வித்தீ போன்ற தமிழ் நாவல்களால் பரவலாக அறியப்பட்டவர். தன்னுடைய 16 வது வயதில் சிறுகதையின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் கு.ப.ரா மற்றும் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படும் நா.பிச்சை மூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் சிட்டுக்குருவி என்ற சிறுகதையின் மூலம் மணிக்கொடி இதழில் அறிமுகமானவர். கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் அறுபது வருடங்கள்இலக்கியத்தில் எழுதி கழித்தவர் எம்.வி.வெங்கட்ராம். அவருக்கு 56 வருடங்கள் கழித்து எழுபதைத்தாண்டிய தன் வயோதிக வயதில் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகடாமி விருது கொடுக்கப்பட்டது. விருதுகளும் அங்கீகாரமும் பாரதி தொடங்கி புதுமைப்பித்தன் வரை உரிய நேரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கிடைக்காமல் போனவை.அதனால்தான் எழுத்து வாழ்க்கை பற்றி எம்.வி.வெங்கட்ராம் இப்படி கூறுகிறார் "என் கதைகளில் நான் என்னையே தேடினேன்.நான் அறிந்ததை கேட்டதை பார்த்ததை பேசியதை அனுபவித்ததை தொட்டதை விட்டதை சிந்தித்ததையே எழுதினேன்.எழுதி எழுதித் தீர்த்தேன் பாதி எனக்காகவும் பாதி பசிக்காகவும். தமிழ்நாட்டில் முழு நேர எழுத்த...