Schindlers list

///"இன வெறுப்புகளுக்கு மத்தியில் மலரும் மனிதநேயம்" Schindler's list- திரைப்படம். உலக வரலாற்றில் இன்றளவும் மிக மோசமான இனப்படுகொலை நிகழ்வாக பார்க்கப்படுவது ஹிட்லர் நிகழ்த்திய யூத இன மக்களின் மீதான படுகொலையே. இரண்டாம் உலகப்போரின் போது கிட்டத்தட்ட 6 மில்லியன் யூத இன மக்களை கொன்றொழித்தான் ஹிட்லர். ஒரு இனத்திற்கு எதிராக செயல்படும் எல்லோருமே ஹிட்லர் போல கெட்டவர்களாக இருப்பதில்லை. யூதர்களை முழுமையாக வெறுத்து அவர்களை படுகொலை செய்த ஆரிய இனத்தைச் சேர்ந்த ஹிட்லர் பிறந்த அதே ஜெர்மனியில் பிறந்து 1200 யூதர்களை காப்பாற்றிய oscar Schindler என்ற மனிதனின் கருணைப் பற்றியும்,நாஜிப்படைகளின் நாச வேலைகள் பற்றியும் படம் பேசுகிறது. ஒரு ஐந்து வயது சிறுவன் நாஜி முகாம் ராணுவ வீரர்களிடமிருந்து தப்பித்து ஓடி பதுங்கு அறைகளுக்குள் ஏற்கனவே நிறைய குழந்தைகள் இருப்பதால் மலக்கிடங்கு தொட்டிக்குள் இறங்கி கழுத்து மட்டும் தெரிய நிற்கும் அந்த ஒரு காட்சி போதும் ஒரு இளம் பிஞ்சு நெஞ்சை இனவெறி எப்படி பதைக்க வைக்கிறது என்பதை உணர. oscar Schindler ஆக நடித்திருக்கும் Liam Neeson,அவரின் உதவியாளராக வரும் யூத இனத்தை...