பழம்பெரும் ஞானத்தை பெறுவதற்கான பத்து வாயில்கள்

 ///ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் எழுதிய

 "பழம் பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்" நூலை முன்வைத்து



ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது அல்லது ஒரு குறிப்பிட்ட கடவுளின் மீது பற்று ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கும் புத்தகம் அல்ல இது.

அக வெறுமையைப் போக்கவும்,அக உலகை உற்றுப் பார்ப்பதற்குமான வழிமுறைகளை அளிக்கிறது இப்புத்தகம்.


ஆன்மீக நிறைவை மனம் அடைவதற்கு இந்து மதம்,புத்த மதம்,சமண மதம் என எல்லா  மதங்களிலிலும் பின்பற்றிய வழிமுறைகளை அளிக்கிறது இந்நூல்.

ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய குரு தொடங்கி அனுத்தரம் வரையிலான பத்து வாயில்களைப் பற்றி விவாதிக்கிறது இக்கட்டுரை தொகுப்பு. 


பத்து வாயில்கள்


1. குரு

2. மந்திரம்

3. தெயவம்

4. உடல்

5. பிராணன்

6. மனம்

7. காமம்

8. கர்மமும்,காயகமும்

9. பிரதிபா

10.அனுத்தரம்


தேடல் கொண்டவர்களின் ஆன்மீக பயணத்தை துவக்கி வைக்கவும் வழிகாட்டவும் ஒரு ஆன்மீக குரு  தேவைப்படுகிறார் என்றும்,


"குருவிற்கு அடிமையாகாத வரை உனக்கு கடைத்தேற்றம் இல்லை" என்று கன்னட புனிதப் பாடகர் புரந்தரதாசர் கூறுவதை சுட்டிக் காட்டுகிறார் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ்.

ஆன்மீக ஞானத்தை அடைய முதன்மையான வாயில் குருவே என்கிறார் சிவபிரகாஷ்.

ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி மந்திரப் பயிற்சியின் விளைவாக மனதில் உள்ள கொந்தளிக்கும் கடலை கடக்க முடியும் என்கிறார்.

நான்காவது வாயிலான உடலைப் பற்றி குறிப்பிடும்போது சமண மதம் வலியை பொறுப்பதே தீட்சை பெறுவதற்கு அளிக்கப்படும் முதல் சோதனை என்கிறது.

சமண துறவி ஒருவர் 

"உடலை வீடென கொண்டோருக்கு இடர்கள் பலவே

உடலை ஓம்புவோர்

பாலையில் பழம் தேடுவோரே"

என ஆன்மீக பாதையில் இடர்களின் ஊற்றுக் கண்ணாக இருப்பது உடலே என்கிறார்.

ஆன்மீகப் பயணம் என்பது நேரடி ஈடுபாட்டின் மூலமோ அல்லது விலக்கம் மூலமோ உடலை பயிற்றுவித்தலும், பயன்படுத்தலுமே ஆகும்.உடல் மறுக்கப்படக் கூடாது. பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆன்மீகப் பாதையில் உடலிலிருந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்பே இல்லை.

ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தா நாவலில் வரும் சித்தார்த்தனை போல புலனின்பங்களில் திளைத்து அதில் சலித்தப் பின் துறவு கொள்கிறான்.

               (ஹெச்.எஸ்.சிவபிரகாஷ்)

ஐந்தாவது வாயிலான பிராணன் என்பது மூச்சு ஆற்றலாகும்.

அனைத்து உயிர்களும் அண்டம் முழுவதிலும் ஊடுருவியிருக்கும் உயிராற்றலுடன் மூச்சை இணைப்பது பிராணனே.


ஆறாவது வாயிலான மனமே பிணைப்புக்கும்,விடுதலைக்கும் காரணம்.புலன்களிலும்,பொருட்களிலும் பற்று கொண்டு பிணைப்புக்கு இட்டுச் செல்கிறது.


புலன்களையும்,பொருட்களையும் ஒறுக்கும் மனம் விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.


ஏழாவது வாயிலான காமம் எளிதில் கையாள முடியாத ஒரு இயல்புணர்ச்சியாக இருப்பதால் மானுடர்கள் அதிலிருந்து விடுபடுவது அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. 


அதனால் தான் மகான் புத்தர் தன்னுடைய சீடர் ஆனந்தாவிற்கு இறுதியாக வழங்கிய போதனையில் பெண்களை ஒரு போதும் நோக்கக்கூடாது என்று கட்டளையிடுகிறார்.


அதற்கு ஆனந்தர் அவர்கள் நம்மை பார்த்தால் என்ன செய்வது என்று கேட்க அவர்களிடம் பேசாதே என்கிறார் புத்தர்,மேலும் ஆனந்தர் அவர்கள் நம்மிடம் பேசினால் என்ற கேள்விக்கு அப்படி அவர்கள் பேசினால் வயதில் இளையவர்களை மகள்களாகவும்,முதியவரை அன்னையாகவும் கருதி அவர்களிடம் பேசலாம் என்று பதிலளிக்கிறார்  புத்தர்.

எட்டாவது வாயிலான கர்மமும் காயகமும் பற்றி 

"உனக்கு நீயே உரிமை கொண்டவன் அதன் பலன் கிடைக்கவில்லை என்று கருதி செயலாற்றாதே

செயலின்மையில் பற்றும் கொள்ளாதே"

என்கிறது பகவத்கீதை.

ஒன்பதாவது வாயிலான பிரதீபா என்பதன் பொருள் அகத்தில் உறையும் படைப்பூக்க ஒளியைக் குறிப்பது.

பத்தாவது வாயிலான அனுத்தரம்ஆன்மீகத்தின் இறுதி நிலையான இதற்கப்பால் ஏதும் இல்லை என்பதை குறிக்கிறது.

அனுத்தரத்தைப் பற்றி கபீர் இவ்வாறு விளக்குகிறார்

"நீரில் குடம் 

குடத்தில் நீர் 

உள்ளும் புறமும் நீரே 

குடமுடைந்தாலும் நீர் நீரே 

அறிவர் உரைப்பது இதுவே".


ஆன்மீக வாழ்வை கண்டடைய விரும்பம் உள்ளவர்களுக்கு உதவும் கருத்துக்களை தாங்கி நிற்கும் ஒரு சிறு பதாகையாக இந்நூல் இருக்கிறது.


ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் ஆங்கிலத்தில் எழுதிய "Ten Doors to the Ancient Wisdom" என்ற நூலை மிக எளிய நடையில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்///


velu malayan

28.12.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்