அறியப்படாத தமிழகம்

 ///தொ.பரமசிவம் எழுதிய அறியப்படாத தமிழகம் நூலை முன்வைத்து



தொ.பரமசிவன் ஒரு பேராசிரியர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் (ஆசான் ஜெயமோகன் தொ.ப ஒரு வரலாற்று ஆய்வாளர் அல்ல என்கிறார்).


தமிழர்களின் மதம்,சாதி,ஆன்மீகம், ஆலய வழிபாடுகள், பண்பாடு,உணவு மற்றும் உடை போன்ற தளங்களின் முன் தடங்கங்களை மற்றும் வேர்களை வரலாற்று ஆய்வின் வழியே இந்நூலில் விவரிக்கிறார் தொ.ப.


தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு,நம்பிக்கைகள்,

வாய்மொழிக் கதைகள் ஆகியவற்றை நெருங்கி பதிவு செய்யும் நாட்டாரியல் ஆய்வு ஆவணமே அறியப்படாத தமிழகம் நூல்.


நம் வேர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஒரு விவரத் தொகுப்பு இந்நூல்.


செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா) உப்பும் கொடுத்த வழக்கத்தினால் தான் சம்பளம் என்ற சொல் பிறந்தது.ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்ற தகவல் நாம் புதிதாக அறிவது.


உடைகள் பற்றி குறிப்பிடும் போது பெண்கள் அணியும் ரவிக்கை எனப்படும் மேலாடை பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் குடியேறிய போது தெலுங்கு மக்களிடமிருந்துஅந்த பழக்கம் வந்தது என்கிறார் தொ.ப.


தாலி கட்டும் பழக்கம் தமிழர் திருமணப்பழக்கம் இல்லை.


சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் கூட இது போன்ற ஆதாரங்கள் இல்லை. 


தாலி தமிழர்களின் தொழில் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் மா.பொ.சி மட்டுமே என்கிறார் தொ.ப.


சங்க இலக்கியங்களில் அரைஞான் கயிற்றில் கட்டும் ஐம்படைத் தாலியை மட்டும் குறிப்புகள் உள்ளதாக கூறுகிறார் தொ.ப.


விநாயகர் எனப்படும் கணபதி வியாபார கணங்களுக்கு வேண்டியவர் என்னும் பொருளிலேயே இதற்கு கணபதி என்னும் பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும்,தமிழ்நாட்டில் இவ்விழாவை அனைத்து சாதியினரும் கொண்டாடினாலும் மிகுந்த ஈடுபாட்டோடு கொண்டாடுபவர்கள் செட்டியார் எனப்படும் பல்வகைப்பட்ட வியாபார சாதியை சேர்ந்த மக்களே என்கிறார் தொ.ப.


வருணக் கோட்பாடு காரணமாக தோலைப் பதப்படுத்தும் பறையர் கீழ் சாதியினர் ஆக்கப்பட்டனர்.ஆனால் பறையர்கள் சில சாதியினருக்கு சமய குருவாக இருந்து பல சடங்குகளையும் நடத்தியுள்ளனர். எனவே சில கோயில்களில் அவர்களுக்கு தனித்த மரியாதையும் அளிக்கப்பட்டிருந்தது.


 "பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பாரில்லாமல் கீழ்ச்சாதி ஆனான்" எனும் சொல்லடை இன்றும் தமிழில் வழங்கி வருவதை சுட்டிக் காட்டுகிறார் தொ.பரமசிவன்.


தமிழர்களுக்கு மொட்டை அடிக்கும் பழக்கத்தை தந்த மதம் பௌத்த மதம்.


துறவு நெறியை இந்தியாவில் உருவாக்கி வளர்த்தவை சமண பௌத்த மதங்களே.


பிச்சை எடுப்பதை நிறுவன ரீதியாக நிறுவிய மதம் சமண மதம்.


அண்ணாவின் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய சொற்கள் உருவெடுத்தது புத்தம்,தர்மம்,சங்கம் ஆகிய பௌத்தமும்மை கோட்பாட்டிலிருந்தே.


கஞ்சா புகைக்கும் பழக்கமும்,அபின் உண்ணும் வழக்கமும் இஸ்லாமிய படையெடுப்பின் மூலம் இந்தியாவிற்குள் வந்தது என  ஏராளமான வரலாற்று,கலாச்சார பண்பாட்டு தகவல்கள் கொண்ட ஒரு சிறந்த நூலாக இருக்கிறது அறியப்படாத தமிழகம்.


கண்டிப்பாக ஒவ்வொரு தமிழரும் வாசிக்க வேண்டிய புத்தகம்///


velu malayan

22.12.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்