வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர். அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடைபடாத மாற்று மெய்மைகளின் தேடல் தான் யுவன் சந்திரசேகர் எழுதிய அவரின் முதல் நாவலான குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலின் களம். அதன் தொடர்ச்சியாகவே வெளியேற்றம் நாவலையும் கருதலாம்.நடைமுறை வாழ்க்கையின் சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை தேட முனையும்,வாழ்க்கையின் சிடுக்குகளின் சிரமம் தாளாமல் குடும்பத்தை உறவுகளை விட்டு திருமணம் ஆன நாளன்றே வீட்டை விட்டு வெளியேறும் வேதமூர்த்தி,ஜய்ராம்,வயிரவன் செட்டியார்,மன்னாதி குற்றாலிங்கம், பால்பாண்டி,சிவராமன்,நிறைய பொம்பளளைங்களிடம் போனதால் நோய் வாங்கும் ராமலிங்கம் பிறகு அது யானைக்கால் என வேதமூர்த்தியால் சரி செய்யப்படுகிறது,கண் தெரியாத ஹரிஹரன், கோவர்த்தனம், என பல்வேறு மனிதர்களின் கதைகளை தேடிச் சென்று கேட்கும் சந்தானம் என எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு வித தொடர்பு இருப்பதை முடிச்சிடுகிறது நாவல். வீட்டை விட்டு வெளியேறும் மேற்கண்ட பெயர் கொண்ட எல்லாரும் சென்று சேர்வது வேதமூர்த்தி என்ற சாமியாரைத்தான். வீட்டைத் துறந்து இலக்கற்று திரியும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம்.அவர்களில் மனப்பிறழ்வுக்கு ...