21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்

 ///இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி எழுதிய 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் புத்தகம் நாம் எதிர்கொள்ள இருக்கும் எதிர்காலத்தை காட்டும் எழுத்து வடிவ கண்ணாடியாக இருக்கிறது.



2050ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி (infotech revolution)மற்றும் உயிரி தொழில் நுட்ப புரட்சி(Biotech revoloution) ஆகிய இரண்டும் நம் தோலுக்கு உள் சென்று நம்மை ஆட்சி செய்யப் போகிறது என்பதை அறிவியல் தரவுகளோடு இந்த புத்தகத்தின் வழியே விவரிக்கிறார் யுவால் நோவா ஹராரி.


பண்டைய வரலாறு, தத்துவம்,இனவாதம்,தேசியவாதம்,மதம் கடவுள் என எல்லா தளங்களின் மீதும் ஒரு பரந்த விவாதத்தை முன் வைக்கிறார்.


உலகின் எல்லா மதங்களும் மானுட இனத்திற்கு ஏதாவது ஒரு பங்களிப்பை செய்திருக்கிறது.

எங்களுடைய மதம் தான் உயர்ந்த மதம் என்று சொல்வதற்கு இங்கே இடமில்லை என்கிறார் யுவால் நோவா ஹராரி.


அறிவியல் கண்டுபிடிப்புகளை அதிகமாக உலகுக்கு வழங்கிய விஞ்ஞானிகள் யூத மதத்தைச் சார்ந்தவர்கள்.நான் கூட யூத மதத்தை சேர்ந்தவன் தான் என்றாலும் யூத மதம் தான் உயர்வானது என என்னால் பெருமை கொள்ள முடியாது என்கிறார் யுவால் நோவா ஹராரி.


நம் முன் இருக்கும் எதிர் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சவால்களை பல்வேறு தலைப்புகள் வழியே நமக்கு பாடம் எடுக்கிறது இப்புத்தகம்.


 Brief Answers to the big Questions என்ற புத்தகத்தின் வழியே ஸ்டீபன் ஹாக்கிங் அணுகிய எதிர்காலத்தை யுவால் நோவா ஹராரி இன்னும் கொஞ்சம் விரிவாக அணுகுகிறார்.



இந்தியாவை சேர்ந்த எஸ்.என்.கோயெங்காவிடம் விபாசனா தியானப் பயிற்சியை கற்ற பிறகு தான்  சேப்பியன்ஸ்,ஹோமோ டியஸ் போன்ற நூல்களை என்னால் எழுத முடிந்தது என்று கூறுகிறார் யுவால் நோவா ஹராரி.


விபாசனா என்றால் ஒருவர் தன் சொந்த மனதிற்குள் சென்று சுய ஆய்வு செய்வது என்பது பொருளாகும்.


இருபத்தியோராம் நூற்றாண்டை நாம் எப்படி எதிர் கொள்ள இருக்கிறோம் என்ற உரையாடலை நம்முடன் விரிவாக நிகழ்த்துகிறது இந்நூல்.


கண்டிப்பாக எல்லோரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம்///


velu malayan

20.1.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்