ரசவாதி(The Alchemist)

 ///Paulo Coelho எழுதிய ரசவாதி(The Alchemist) நாவலை முன்வைத்து



“Where your treasure is,there also will be your heart"

உன்னுடைய இதயம் எங்கே இருக்கிறதோ,அங்கே தான் உன் புதையலும் இருக்கும்.


உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல கோடி பிரதிகள் விற்பனையான Cult Classic நாவல் ரசவாதி (The Alchemist).


தத்துவம்,சுயமுன்னேற்றம்,ஞானம்,மாய கற்பனை கதை என எல்லா வகைமைக்குள்ளும் வைத்து வாசிக்க வேண்டிய நாவல் இது.


மனித ஆன்மாவை உணரவும்,பிரபஞ்ச ஆன்மாவை கண்டடைந்து கொள்ளவும் ஒரு ஆட்டிடையன் கொள்ளும் சாகசப் பயணமே ரசவாதி நாவல்.


தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை கண்டடைந்து கொள்பவனே ஒரு சிறந்த ரசவாதி.


அதனால் தான் உன் இதயம் எங்கே இருக்கிறதோ,அங்கே தான் உன் புதையலும் இருக்கிறது என்கிறார் பாவ்லோ கொயலோ.


நாவலை எழுதிய பாவ்லோ கொய்லோ ஒரு கத்தோலிக்கராக இருந்தாலும் எல்லா மதங்களுக்குமான தத்துவங்களை இந்நாவல் முழுக்க பேசியிருக்கிறார்.


எல்லா மதங்களும் ஒரே ஒளியைத் தான் சுட்டிக்காட்டுகின்றன.


எல்லா விஷயங்களுமே ஒரே விஷயத்தின் வெளிப்பாடுதான்.


நீ உண்மையிலேயே ஒன்றை ஆழமாக விரும்பும் போது அதை அடைவதற்கு இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் உதவிக்கு வரும் என்கிறார் பாவ்லோ கொய்லோ.


தங்கள் கனவை பின் தொடர்ந்து

செல்கின்றவர்களுக்கு வாழ்க்கை தாராளமாக அள்ளி வழங்குகிறது என்ற உண்மையையும்,தனக்குள் இருக்கின்ற பொக்கிஷத்தையும் சாண்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் சிறுவன் கண்டறிவதை நாவல் மையப்படுத்துகிறது.


நாவலில் பொக்கிஷமாய் வரும் வரிகள் சில:


"தன்னுடைய கனவை நனவாக்குவது தான் ஒருவனுடைய ஒரே கடமையாகும்"


"துன்பத்தைக் குறித்த பயம் அந்தத் துன்பத்தை விட அதிக மோசமானது"


"உங்கள் கவனத்தை எப்போதும்  நிகழ்காலத்தின் மீது உங்களால் குவிக்க முடிந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக மனிதராக இருப்பீர்கள்"


வாசிக்க வேண்டிய ஒரு நாவல்///


Velu malayan

30.1.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்