வாசிப்பது எப்படி?

 ///இது ஒரு உபதேச குப்பை என்று ஒதுக்கிவிட முடியாத ஒரு சிறந்த நூல்.



ஏன் வாசிக்க வேண்டும்?எதற்கு வாசிக்க வேண்டும்?எப்படி வாசிக்க வேண்டும்? என்பதை ஆரம்ப நிலை வாசகர்களுக்கு ஒரு வாசலை உருவாக்கி கொடுக்கிறது இந்நூல்.


ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்வியை என்னையோ அல்லது வேறு எவரையோ நோக்கி எழுப்பும்போதெல்லாம் அது நாம் ஏன் வாழ வேண்டும் என்பதற்கு நிகரான கேள்வியாகவே படுகிறது எனக்கு.


வாசிக்காமல் போனால் வாழ முடியாதா? முடியும்.ஆனால் வாழ முடியாது.பிழைக்கத்தான் முடியும். வாழ்வது என்பது ஒருவன் அன்றாடம் இயங்குவது.பிழைப்பது என்பது இயக்கமின்மை.கோமாவில் இருக்கும் ஒரு நோயாளியைப் போன்றது.


தொடர்ச்சியான வாசிப்பு உங்களுக்குள்ளிருக்கும் வார்த்தை கிடங்குகளை நிரப்பும்.


வாசிப்பதினால் நீங்கள் சராசரி மனித கூட்டத்திலிருந்து தனித்து தனித்துவமிக்கவராய் உணர்வீர்கள்,தெரிவீர்கள்.


வாசிக்கவும்,வாசிப்பின் அவசியத்தை உணர்த்தவும் கூடிய மிகச்சிறந்த வழிகாட்டி இந்நூல் என்பது என் எண்ணம்///


Velu malayan

24.1.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்