நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

 ///ரமணன் எழுதிய "நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்" நூலை முன்வைத்து



சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற ஆகஸ்ட் 15,1947 முதல் அவர் மறைந்த மே 27, 1964 வரையிலான 18 ஆண்டுகால அவரது ஆட்சி ஆளுமையின் பலம் பலவீனங்களை பதிவு செய்ததில் முக்கியமான கவனத்தை பெறுகிறது இந்தப் புத்தகம்.


நவ இந்தியாவின் சிற்பி,அணிசேரா கொள்கையை உருவாக்கியவர்,சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒருங்கிணைக்க ஜினாகத்,காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க  சாமர்த்திம் செய்தவர் என்று பாராட்டப்பட்டவர் நேரு.


ஆனால் காஷ்மீரை இந்தியாவுடன் ஒரு நிரந்தர பகுதியாக இணைக்காமல் தவற விட்டது,

1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீன போரை சரிவர கையாளாமல் தோல்வி நோக்கி கொண்டு சென்றது ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இன்று வரை நேரு ஆட்சி ஆளுமையின் மீது  விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது.


காஷ்மீர் பிரச்சினையை வல்லபாய் பட்டேலிடம் விட்டிருந்தால் அவரே முடித்திருப்பார்.அதற்குள் நேரு தலையிட்டு காஷ்மீர் பிரச்சினையை ஐநா சபை வரை கொண்டு சென்று ஒரு பெரிய தவறை இழைத்து விட்டார் என்று காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் மகன் கரண் சிங் குறிப்பிடுவதாக ரமணன் பதிவு செய்கிறார்.


இந்திய சீன போரில் இந்திய தோல்விக்கு காரணம் நேருவின் நம்பிக்கைக்குரிய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.கே கிருஷ்ணன் மேனனும், போரின்போது ஜெனரலாக இருந்த பி.என்.முல்லிக் ஆகிய இருவரும் கடைப்பிடித்த மோசமான அணுகுமுறைகளே காரணம் என்பதையும் பதிவு செய்கிறார் ரமணன்.


நேருவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த டி.டி.கே கிருஷ்ணமாச்சாரி மீதும்,

நேருவின் மீதும் நேருவின் மருமகன் பெரோஷ்காந்தி குற்றம் சுமத்திய  முந்த்ரா ஊழல் போன்றவை இதுவரை நாம் அறியாதது.


நேருவிற்க்கும்,ஷேக் அப்துல்லாவிற்கும்  இருந்த நட்பு,பின் அந்த நட்பே இருவருக்குள்ளும் பகைமையை ஏற்படுத்தியது,

தன் மகள் இந்திரா காந்தி என் பேச்சைக் கேட்டுக்கொண்டு கேரளாவில்  இ.எம்.எஸ்.நம்பூதிரி பட் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை 1959ஆம் கலைத்தது போன்ற நேருவின் வேறு முகங்களையும் இந்நூல் காட்டுகிறது.


1963 ஆம் ஆண்டு கே.பிளான் ஏற்படுத்தப்பட்டதின்  நோக்கம் காங்கிரஸ் கட்சியிலிருந்த வயதானவர்கள் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணியாற்ற வேண்டும் என்பதே என வரலாற்றில் சொல்லப்பட்டாலும், அமைச்சரவையில் நேருவின் திட்டங்களுக்கு  இடையூறாக இருந்தமொரார்ஜி தேசாய் மற்றும் எஸ்.கே.பாட்டீல்ஆகிய இருவரையும் அமைச்சரவையிலிருந்து தூக்குவதற்காக போடப்பட்டதே கே.பிளான் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.


தான் பகுதி வகித்த 18 ஆண்டுகளில் கல்வி, பொருளாதாரம், தொழில்,பன்னாட்டுக் கொள்கைகள் ஆகியவற்றில் நேரு ஏற்படுத்திய புர வலுவான அடித்தளத்தின் மீதுதான் இன்றைய வலுவான ஜனநாயக இந்தியா நின்று கொண்டிருக்கிறது.


நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்ற போது அவருக்கு வயது 58.


தான் இறக்கும் வரைக்கும் ஒரு இளைஞனின் உடல் மொழியோடும், மிடுக்கோடும் இயங்கி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் நிர்மாணித்தவர்  ஜவஹர்லால் நேரு.


நேருவின் ஆட்சியை நாம் நெருங்கிப் பார்ப்பதற்கான ஒரு ஆவணமாக இருக்கிறது இந்த புத்தகம்///


Velu malayan

1.2.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்