நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

///ரமணன் எழுதிய "நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்" நூலை முன்வைத்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற ஆகஸ்ட் 15,1947 முதல் அவர் மறைந்த மே 27, 1964 வரையிலான 18 ஆண்டுகால அவரது ஆட்சி ஆளுமையின் பலம் பலவீனங்களை பதிவு செய்ததில் முக்கியமான கவனத்தை பெறுகிறது இந்தப் புத்தகம். நவ இந்தியாவின் சிற்பி,அணிசேரா கொள்கையை உருவாக்கியவர்,சமஸ்தானங்களாக சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஒருங்கிணைக்க ஜினாகத்,காஷ்மீர் போன்ற பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க சாமர்த்திம் செய்தவர் என்று பாராட்டப்பட்டவர் நேரு. ஆனால் காஷ்மீரை இந்தியாவுடன் ஒரு நிரந்தர பகுதியாக இணைக்காமல் தவற விட்டது, 1962 ஆம் ஆண்டு நடந்த இந்திய சீன போரை சரிவர கையாளாமல் தோல்வி நோக்கி கொண்டு சென்றது ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இன்று வரை நேரு ஆட்சி ஆளுமையின் மீது விழுந்த கீறல்களாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினையை வல்லபாய் பட்டேலிடம் விட்டிருந்தால் அவரே முடித்திருப்பார்.அதற்குள் நேரு தலையிட்டு காஷ்மீர் பிரச்சினையை ஐநா சபை வரை கொண்டு சென்று ஒரு பெரிய தவறை இழைத்து விட்டார் என்று காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் மகன் கரண் சி...