குள்ளச் சித்தன் சரித்திரம்
.jpeg)
யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச் சித்திரன் சரித்திரம் நாவலை முன்வைத்து: என் பால்யம் கதைகள் ஊட்டி வளர்க்கப்பட்டவை.என் அம்மாவைப் பெற்ற என் பாட்டியின் பெயர் ஜானகி. மர்மங்கள் நிறைந்த ஈசன் காட்டு மொட்டையன் கதைகள்,தான் பார்த்த அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும் படத்தின் கதைகள் என எனக்கு கதைகளை சொல்லி வளர்த்தவர் என் பாட்டி. எதார்த்தத்திற்கு நேர் எதிராக நடக்கும் அதி அற்புத கதைகள் தான் மனதிற்கு கிலேசம் ஊட்டுவதாக உள்ளது. புற உலக வாழ்வின் எதார்த்த நிகழ்வுகளிலிருந்து ஒரு படி தள்ளி நடக்கும் அதிசயங்களுக்கு எப்போதுமே நம் அகம் ஆசை கொள்கிறது. லௌகீக வாழ்வின் உபாதைகளுக்கு மனிதர்கள் கோயில்,குளம்,கடவுள், ஜோசியம் என எதன் மூலமாகவோ பரிகாரம் தேடி அலைகிறார்கள். தங்கள் வாழ்வின் குறைகளை தீர்க்க ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா என ஒரு வித நம்பிக்கையில் வாழ்கிறார்கள். நமக்கு கடவுள் வழிபாடு சார்ந்து,மறுபிறப்பு சார்ந்து நிறைய நம்பிக்கைகள் உண்டு.மறுபிறப்பு என்பது உண்மையில் உண்டா?நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து செயல்களும் தற்செயல்களின் கூட்டுத்தொகை தானா? நான் எனும் இந்த சரீரம் என் முன் பிறப்பின் தொடர்ச்சியாகக் க...