சந்தியா

 ///பிரபஞ்சனின் சந்தியா நாவலை முன்வைத்து



பெண்ணை ஒருவனின் தாயாக பார்த்திருக்கிறோம்.மகளாக பார்க்கிறோம்.மனைவியாக பார்க்கிறோம்.எனினும் தனி மனுஷியாக பார்த்திருக்கிறோமா? என்று கேட்கும் பிரபஞ்சனின் ஆண் மனம் பெண் மனமாய் உருமாறி எழுதிய கதைதான் சந்தியா நாவல்.

தன் மனதில் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் மனதை ஊற்றி இந் நாவலை எழுதியுள்ளார் பிரபஞ்சன்.

சமூகக் கட்டமைப்பில் ஒரு ஆணின் பார்வையில் எப்பொழுதும் எக்குலப்பெண்ணும்  தாழ்த்தப்பட்டவள் தான்.

இன்னமும் வாழ்வை எதிர்கொள்வதில் பெண்களுக்கு சில தடைகளை இச்சமூகம் வகுத்து வைத்துள்ளது.

குடும்பம் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பில் ஓர் ஆணின் இனவிருத்தி இச்சையை பூர்த்தி செய்யும் சதை இயந்திரமாகவே பெண் இருக்கிறாள் என்ற கோபத்தின் உருவம் தான் இந்த நாவலில் வரக்கூடிய சந்தியா பாத்திரம்.

சக மனிதர்களைப் பற்றி தன் எழுத்துக்களில் எப்பொழுதுமே அன்பொழுக எழுதுபவர் பிரபஞ்சன்.



அவர் ஒரு எழுத்துலக ஏசுநாதர்.உலகத்தில் எந்த மனிதரும் வெறுக்கப்பட வேண்டியவர் இல்லை என்கிறார் பிரபஞ்சன்.

மயிலிறகின் வருடல்களும், கடவுளின் அன்பையும் கொண்டவை அவருடைய எழுத்தின் வரிகள்.

இந்த நாவலில் வரும் சந்தியா கூட நிறைய பேரிடம் முரண்படுகிறாள். ஆனால் யாரையும் வெறுப்பதில்லை.

இந்நாவலில் வரும் சந்தியா பாத்திரம் அவள் ஒரு தொடர்கதை படத்தில் வரும் கவிதாவை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

பிரபஞ்சனின் மொழி அழகியலுக்காகவும்,ஒரு பெண்ணின் சுய சிந்தனையை,விடுதலையை கனமாக பேசிய விதத்தில் சந்தியா மிக முக்கியமான நாவல் என்பேன்.

குறிப்பாக பெண்களை விட ஆண்கள் இந்நாவலை அவசியம் வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்///


velu malayan

21.10.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்