போக்கிடம்
///விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலை முன்வைத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு விட்டல்ராவ் எழுதிய நிலநடுக்கோடு நாவலை வாங்கினேன். இதுவரைக்கும் அந்த நாவல் வாசிக்கப்படாமல் புத்தக அலமாரியிலேயே தூங்கிக்கொண்டிருக்கிறது. புத்தக அலமாரியை சரி செய்து கொண்டிருக்கும் போது விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவல் கண்ணில் பட்டது.எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். படிக்க ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது அது என் சொந்த மண்ணின் கதை, என் தருமபுரி மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்று. டேனிஸ்பேட்டை என்ற கிராமத்தினை மையப்படுத்தியது தான் நாவல்.பொம்மிடி,மொரப்பூர்,தொட்டம்பட்டி, பூதநத்தம்,கடத்தூர்,அரூர் ஆகிய எங்கள் ஊர்களைப் பற்றிய சித்திரத்தை இந்நாவல் முழுக்க காட்டியுள்ளார் விட்டல்ராவ். சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள இடங்களில் இரும்பின் முக்கிய தாது பொருளான மேக்னசைட் இருப்பதால் அப்பகுதியில் உள்ள கனிமங்களை எடுக்க டேனிஸ்பேட்டை என்ற கிராமத்தை அரசு கையப்படுத்து அந்த கிராமத்தையே இடப்பெயர்வு செய்வது தான் நாவலின் கதை. ஏய் நல்லா கீறயா?டேய் பியா எப்பிடிடா கீற என தருமபுரி மக்களின் மொழியை நாவல் முழுக்க காணலா...