
///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "பதின்" நாவலை முன்வைத்து நாம் ஒவ்வொருவருக்குள்ளும் அவரரவர்களுடைய பால்ய பருவ நினைவுகள் கட்டாயம் இருக்கும். நாம் தொலைத்த அந்த பால்ய காலத்தின் நினைவுகளில் நம் மனம் வாழ்ந்து பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது இந்த பதின் நாவல். நம் அறிவாளித்தனத்தையும், மேதாவி மனதையும் கழட்டி வைத்துவிட்டு நமக்குள் மிச்சமிருக்கும் குழந்தைத்தன மனதின் கண்களால் வாசிக்க வேண்டிய நாவல் இது. இந்நாவலில் வரும் நந்துவும்,சங்கரும் யாரோ இரண்டு சிறுவர்கள் அல்ல. நீங்களும்,நானும் தான். சிறுவர்களின் உலகம் தனித்துவமானது.அங்கே பெரியவர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. நாம் பெரியவர்களாக வளர வளர நமக்குள்ளிருக்கும் குழந்தைத்தனங்கள் வற்ற ஆரம்பித்து விடுகிறது. என் பால்ய காலம் நடு நாக்கில் வைத்ததும் கரைந்து இனிக்கும் சோன் பப்டியைப் போன்றது தான்.ஆனால் அதை கசப்பாக்கியது பள்ளி தான். ஒரு நாள் எங்கள் ஊர் வறட்டாறு மணலில் விளையாடிக் கொண்டிருந்த என்னை என் அப்பா வாடா சேலத்திலுள்ள அத்தை வீட்டுக்குப் போகலாம் எனச் சொல்லி அழைத்துக் கொண்டுப் போய் தீர்த்தமலையிலுள்ள அரசு ஆரம்ப...