
///மக்கள் நலனுக்காக அரசின் அவலங்களை பாட்டு மூலமாக பிரச்சாரம் செய்யும் தெருவோர மேடைப் பாடகரான நாராயண் காம்ளேவை மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே காவல்துறை கைது செய்கிறது. அதற்கான காரணம் நாராயண் காம்ளே பாடிய பாடலால் தான் வாசுதேவ் பவார் என்ற மனித மலம் மற்றும் சாக்கடை குழிக்குள் வேலை செய்யும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி கைது செய்கிறது. நாராயண் காம்ளேவிற்கு ஆதரவாக வினய் வோரா என்ற மனித உரிமை ஆர்வலர் மற்றும் வழக்கறிஞரும், நாராயண் காம்ளேவிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அவருக்கு எதிராக ஒரு பெண் வழக்கறிஞரும் வாதாடுவது தான் Court படமே. வினய்வோராவாக நடித்திருக்கும் வழக்கறிஞர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விவேக் கோம்பர்.ஒரு மனித உரிமையாளர்,வழக்கறிஞர் என்ற பாத்திரத்தில் நாராயண் காம்ளே விற்கு ஜாமீன் வாங்கி கொடுப்பதாகட்டும், இறந்து போன வாசுதேவ் பவாரின் மனைவி ஷர்மிளா பவாரை அவர் வசிக்கும் சேரிப் பகுதியில் தன் காரிலேயே கொண்டு சென்று விடுவதாகட்டும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரால் தாக்கப்படுவதை நினைத்து அழுதுவிட்டு அடுத்த நாளே தன் அன்றாட பணியை கவனிப்பதாகட்டும் என சிறப...