///ஆற்றின் அடி ஆழத்தில் யாருக்கும் தெரியாமல் சலனமற்று கிடக்கும் கூழாங்கற்களைப் போல எவரும் கவனிக்காத எளிய மனிதர்களின் மீதான கரிசனம் தான் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள்.

தனிமையின் நூறு ஆண்டுகள் என்ற ஒரே ஒரு புத்தகத்தை வாங்க அவர் டெல்லி சென்ற கதையை அவர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

சென்னையில் தங்க வீடில்லாமல் தன் நண்பன் அறையில் தங்கியிருந்த போது தேடித் தேடி வாங்கிய புத்தகங்களை தன் நண்பன் அறையில் வைத்து விட்டு சில நாட்கள் கழித்து நண்பன் அறைக்கு போனபோது அவன் அறையை காலி செய்து விட்டான் என்றும்,அந்த புத்தகங்களை பழைய புத்தகக் கடையில் விலைக்கு போட்டு விட்டான் என்பதை அறிந்து அந்த புத்தகங்கள் எந்த பழையக் கடையில் விற்றிருப்பான் தன் நண்பன் என்று தேடித் திரிந்த அவஸ்தையை நண்பன் செய்த அவமானத்தை என் அவஸ்தையென,என் அவமானமென உணர்ந்திருக்கிறேன்.

புத்தகங்களுக்கென ஒரு வீடு அல்ல,
ஒரு அறை ஒதுக்குவதே இங்கு அரிது.

எனக்கு ஒரு கனவு இருக்கிறது.அது புத்தகங்களுக்கென ஒரு வீட்டையே ஒதுக்குவது.

தற்போது என் வீட்டின் இரண்டு அறைகளில் இருக்கும் புத்தகங்கள் என் வீட்டின் எல்லா அறைகளையும் நிரப்புவதற்கான புத்தக நுகர்வும்,
வாசிப்பு நுகர்வும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது///

 இன்று வாங்கிய புத்தகம்

"வீடில்லாப் புத்தகங்கள்"

எழுதியவர் :எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம்   :தேசாந்திரி
விலை         :ரூ.250/-

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்