காச்சர் கோச்சர் நாவலை முன்வைத்து
இந்திய மொழிகளில் அதிக ஞானப் பீட விருதுகளை பெற்ற மொழியாக கன்னட மொழி உள்ளது என்பதன் வழியே அதன் இலக்கிய செழுமையின் ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ளலாம்.
குவேம்பு தொடங்கி தத்தாத்ரேய ராமச்சந்திர பிந்த்ரே,சிவராம காரந்த்,
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி,கிரிஷ் கர்னாட் சந்திரசேகர கம்பாரா ஆகிய எழுத்தாளர்கள் என கிட்டத்தட்ட எட்டு ஞானப் பீடப் பரிசுகளை கன்னட மொழிக்கு வாங்கிக்கொடுத்துள்ளார்கள்.
தமிழில் அகிலனுக்கு அடுத்து கால் நூற்றாண்டுக்கு மேல் கால்கடுக்க நின்ற தமிழை ஜெயகாந்தன் ஞானப் பீடத்தில் அமர வைத்தார்.தமிழின் இலக்கிய தரம் அகிலனையும்,ஜெயகாந்தனையும் இன்னும் தாண்டாமல் நிற்கிறது.சிவராம காரந்துக்கும்,யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கும் ஈடாக எவரையாவது தமிழில் கைகாட்ட முடியுமா?ஆனால் தமிழிலிருந்து தோன்றிய கன்னட மொழி மிகச் சிறந்த இலக்கிய படைப்புகள் மற்றும் படைப்பாளிகளின் வழியே மற்ற மொழிகளை தாண்டி தன்னை முன்னகர்த்தி முன் நிற்கிறது. அப்படிப்பட்ட கன்னட மொழியிலிருந்து ஒரு நவீன உளவியல் புனைவு வடிவில் வந்திருக்கும் நாவல் தான் காச்சர் கோச்சர்.
நவீன கன்னட இலக்கியத்தின் ஆரம்பப் புள்ளியான யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மருமகனான விவேக் ஷான்பாக் என்பவர் தான் இந்நாவலை எழுதியுள்ளார்.கன்னடத்திலிருந்து தமிழுக்கு மடை மாற்றியவர் கே.நல்லதம்பி.நல்லதம்பி இந்நாவலை ஒரு மொழிமாற்ற நாவல் என்ற எண்ணம் எழவிடாமல் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்க காரணம் அவர் ஒரு துபாஷி.அவருக்கு தமிழும், கன்னடமும் நன்றாக எழுதவும்,பேசவும் தெரியும் என்பதே.காச்சர் கோச்சர் ஒரு Psychological Fiction வகை நாவல்.
பெங்களூருவின் புறநகரப் பகுதியில் வசிக்கும் ஒரு கீழ் மத்தியதர வர்க்க குடும்பத்தைப் பற்றிய கதை.
இட நெருக்கடியில் வசிக்கக் கூடிய வீடும், பொருளாதார நெருக்கடியோடும் வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம் திடீரென வசதி பெருகி பணக்காரர்களாக மாறிய பிறகு அவர்களின் சுகத்தை,இருப்பை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் செய்யும் போலித்தன பாஷாங்குகள்,
புது பணத்தின் இயக்கத்தால் அவர்களின் ஒழுக்கமும் அறமும் கெட்டு இழிந்த பணக்காரர்களாக மாறி வாழ்வதை மிக நுட்பமாக எழுத்தாக்கியுள்ளார் விவேக் ஷான்பாக்.
பெங்களூருவின் 100 வருட பழமையான ஒரு காபி ஹவுசில் அமர்ந்திருக்கும் ஒரு கதை சொல்லி வழியே தொடங்குகிறது நாவல்.இந்த கதை சொல்லிக்கு பெயர் கிடையாது.கதை சொல்லியின் குடும்பம் பெங்களூரின் புறநகர் பகுதியில் வசிக்கும் ஒரு கீழ் மத்தியதர வர்க்க குடும்பம்.கதை சொல்லியின் அப்பா ஒரு சேல்ஸ்மேன்.அம்மா வீட்டு நிர்வாகி.அக்கா மாலதி திருமண உறவு முறிந்தவள்.சித்தப்பா வெங்கடாச்சலம். சித்தப்பாவை B.Com வரை படிக்க வைக்கிறார் கதை சொல்லியின் அப்பா. முன் வாசலில் நின்று பார்த்தால் பின் வாசல் தெரியும் ஒரு ரயில் பெட்டியைப் போன்ற நெருக்கமான வீட்டில் வசிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் கதை சொல்லியின் அப்பாவிற்கு கம்பெனி முன்கூட்டியே விருப்ப ஓய்வை தந்து விடுகிறது.இப்படிப் பட்ட ஒரு சூழலில் கதை சொல்லியின் அப்பாவின் பென்சன் மற்றும் பி.எப் பணத்தை கொண்டு கதை சொல்லியின் சித்தப்பா சோனா மசாலா கம்பெனி ஆரம்பிக்கிறார்.இதில் கதை சொல்லியின் அப்பா பாதி பங்குதாரர். நிறுவனம் வளர்ந்து பணம் வர ஆரம்பிக்கிறது.குடும்பத்தில் முதல் முக்கிய நபராக சித்தப்பா மாறுகிறார்.
குடும்பத்தில் சித்தப்பாவின் மனம் கோணாமல்,எந்த கேள்வியும் எழுப்பாமல் வாழவும்,நடிக்கவும் ஆரம்பிக்கிறார்கள். காரணம் சித்தப்பாவின் பணம்.அவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.இந்த கதை சொல்லிக்கு உழைக்காமலேயே சோனா நிறுவனத்தின் பேருக்கு இயக்குனர் என்ற பெயரில் மாதம் மாதம் அவன் வங்கிக்கணக்கில் பணம் போடப்படுகிறது.உழைக்காமலே தன் சித்தப்பாவின் உழைப்பில் வாழ்கிறான்.
இந்த கதை சொல்லி நல்லவனா,கெட்டவனா எந்த வரையறைக்குள்ளும் வைக்க முடியாதவன்.எதர்க்குள்ளும் செல்லாமல் எதையும் வெளியிலிருந்து வேடிக்கைப் பார்ப்பவன்.கதைசொல்லியின் வழியாக தன் குடும்பத்தின் பழைய வாழ்க்கை, தற்போதைய புது பணக்கார வாழ்க்கை, தன் கடந்த கால காதல் தோல்வி,தற்போதைய மனைவி அனிதா, அனிதாவால் குடும்பத்தில் எழும் சிக்கல் போன்றவை கதை சொல்லியின் பார்வை வழியாக ஏழு அத்தியாயங்களாக விரிகிறது நாவல்.
"அம்மா "( குமுதா)
கதை சொல்லியின் அம்மாவுக்கு குடும்பம் தான் உயிர்.
"குடும்பத்திற்கு சிரமம் என்றால் அவர் எதை வேண்டுமானாலும் செய்வார்" என கதை சொல்லியே சொல்கிறான். குடும்பத்தின் அடுக்கில் தான் தற்போது இருக்கும் இந்த இடத்திற்கு,குடும்ப நிர்வாக அதிகார பிடியை தளர்த்த வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் கதை சொல்லியின் அம்மா.அப்படி நினைப்பவரின் அதிகார அடுக்கிற்கு ஒரு ஆபத்து சுஹாசினி என்ற பெண் வடிவில் வருகிறது.
சுஹாசினி (கருப்பு எறும்பு )
ஒரு நாள் கதை சொல்லியின் வீட்டுக்கு அவனுடைய சித்தப்பாவை தேடி ஒரு பெண் வருகிறாள்.
அந்தப் பெண்ணின் பெயர் சுஹாசினி.
வெங்கடாச்சலத்திற்கு பிடித்த மசூர் பருப்பு குழம்புடன் அவரை பார்க்க வருகிறார். சித்தப்பா சுஹாசினியை யாரென்று தெரியாது என தன் அண்ணியிடம் அவளை போகச் சொல்லுங்கள் என சைகை காட்ட அதுவரைக்கும் வெங்கடாசலத்திற்கும், அவளுக்கும் என்ன உறவோ என மண்டைக்குள் பல நினைவுகளை ஓடவிட்ட கதை சொல்லியின் அம்மா தன் கொளுந்த நாரின் ஒரு சைகை பதிலில் சுஹாசினி மீது கடும் வார்த்தைகளாய் பாய்ந்து அவள் கொண்டு வந்த மசூர் பருப்பு குழம்பை நிலத்தில் கொட்டி அவளை அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். அப்போது சுஹாசினி "வெங்கா...வெங்கா வெளியில வாடா நான் தான்டா உன் டுவ்வி" என்று கத்துவதில் இருக்கும் ஒருமை,
மசூர் பருப்பு குழம்பு வெங்கடாச்சலத்திற்கு பிடிக்கும் என்பதும் அவளுக்கு வெங்கா மீதிருக்கும் அன்பை கண்டும் குழம்பி பயப்படுகிறார்கள்.
தாம் இப்போது வாழ்ந்து கொண்டிக்கும் வசதிக்கு ஆபத்து வந்து விடுமோ என கதை சொல்லியின் அம்மாவும், அக்காவும் பயப்படுகிறார்கள். சுஹாசினியை வீட்டிற்குள் நுழைய விடாமல் துரத்தும் தன் அம்மா மற்றும் அக்கா மாலதியை கதை சொல்லி இப்படிச் சொல்கிறான்."தங்கள் எல்லைகளைக் காத்துக் கொள்ளும் நாய்களைப் போல அவர்கள் கத்தினார்கள்" என்று.இதை எல்லாம் பார்க்கும் கதை சொல்லியின் மனைவி அனிதா குடும்பத்தில் உள்ளவர்கள் நோக்கி கேள்வி எழுப்புகிறார். இதுவரை சித்தப்பாவை நோக்கி கேள்வி எதுவும் எழுப்பாமல் பாதுகாத்து வந்த குடும்ப சமநிலையை அனிதா சற்று உடைக்க பார்க்கும் போது பயப்படுகிறார்கள்.
"எறும்புகள் "
இந்த நாவலில் எறும்புகள் பற்றிய ஒரு அத்தியாயம் வருகிறது.கதை சொல்லியின் குடும்பம் வசிக்கும் பழைய வீட்டில் எறும்புகள் தொல்லை அதிகமாக இருப்பதால் அதை தடுக்க கதை சொல்லியின் அம்மா பல்வேறு உத்திகளை கையாள்கிறார். இரண்டு வகையான எறும்புகள்.ஒன்று சுறுசுறுப்பாக இருக்கும்.இன்னொன்று எப்போதாவது வரும் கருப்பு எறும்பு. எறும்புகளை தன் எதிரிகளாக, அரக்கர்களாக நினைக்கிறார் கதை சொல்லியின் அம்மா. குடும்பத்தில் உள்ள எல்லோருமே எறும்புகளை வெவ்வேறு வடிவங்களில் கொல்கிறார்கள்.உண்மையில் எறும்புகள் என்பது இங்கு ஒரு குறியீடு. கதை சொல்லியின் குடும்பத்திற்குள் வெளியிலிருந்து நுழையும் இரண்டு எறும்புகளாக சுஹாசினியும்,
அனிதாவும் நாவலில் உருவகப்படுத்தப்படுத்தப்படுகிறார்கள்.
"அப்பா" (காப்பி கிங்)
குடும்பத்தின் இரண்டாவது முக்கியமான நபர் ஏனெனில்,
சோனா மசாலா கம்பெனியின் பாதி பங்குதாரர் என்பதால்.இந்த குடும்பத்தில் பழைய வாழ்க்கையை மறக்காத அறமுள்ள மனிதர்.பணம் அவர்களை அப்பாவின் பிடியிலிருந்து தளர்த்தி விடுகிறது.தற்போது கிடைத்திருக்கும் வசதியான வாழ்க்கைக்கு தகுதியற்றவர் போல சிறிது தயக்கத்துடன் அனுபவிப்பவர்.மேலும் "செல்வம் பேயைப் போல ஆடக்கூடாது மரத்தைப் போல மெல்ல வளர வேண்டும்" என்று நினைக்கும் குணமுள்ளவர்.சோனா மசாலாவின் பங்கு உரிமை அப்பாவின் சொந்த சம்பாத்தியம்.அதை தர்ம காரியங்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் பாதுகாக்கப்படுபவர்.கதை சொல்லி தன் அப்பாவைப் பற்றி இப்படிச் சொல்கிறான்" லட்சிய வெறி பிடித்தவர்கள் இதுபோல் எதையாவது செய்யத் தயங்க மாட்டார்கள்.வீட்டு சனங்கள் தெருவுக்கு வந்தாலும் அவர்களுக்கு அது ஒரு சாதனைதான் " என்று. தன் அப்பாவைச் சொத்துக்காகத்தான் அவர் நாக்கின் சபலம் குறையாமல் பார்த்து பாது காக்கப்படுகிறார் என்பதின் வழியே இந்திய குடும்பங்களில் உள்ள வாரிசுகளின் சுயநலம்,போலிப்பாசம் ஆகியவற்றை பதிவு செய்கிறது இந்நாவல்.
சித்தப்பா வெங்கடாசலம் (ஜுக்னு )
He is a inteligent Crook.வெங்கடாசலம் ஒரு கூர்மதியுடைய வஞ்சகர்.
ஒரு நிறுவனம் மூலம் பணம் ஈட்டி முதலாளியாக மாறுபவர்.
தன் அதிகார கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனத்தைப் போலவே,தனது அண்ணன் குடும்பத்தையும் பணத்தின் மூலம் ஒரு அதிகாரம் செலுத்தும் அமைப்பாகவும் வைத்திருக்கிறார்.அடிப்படையில் நல்லவர்.ஒர் நாள் நடு இரவில் கம்பெனிக்கு மசாலா லோடு ஏற்றி வருபவரிடம் எடை போட்டு தான் பொருளை இறக்குவேன் என்ற வியபாரத்தனமும்,பொருளை இறக்கும் கூலியாளுக்கு காலில் அடிபட்டவுடன் அவனுக்கு கட்டுப் போட்டு உதவுவதில் மனிதத்தனமும் காட்டும் குணம் கொண்டவர். பணம் ஈட்டுவதில்,
தன் அண்ணன் மகனை எங்கேயும். போய் எவரிடமும் வேலை செய்யாதே நம் கம்பெனியை பார்த்துக் கொள் என கதை சொல்லியை சுய முகம் இல்லாமல் செய்யும் சூதானவர்.தன்னை தேடி வரும் சுஹாசினியை குடும்ப அடுக்கில் தனக்கிருக்கும் மரியாதை சரியும் என்பதற்காக நிராகரிக்கும் குரூர குணமுள்ளவர்.ஜீக்னு என்ற தர்மேந்திரா நடித்த இந்தி படத்தில் தர்மேந்திரா வைரத்தை திருடும் காட்சியை கதை சொல்லியிடமும்,மாலதியிடமும் வெங்கடாச்சலம் சொல்வதால் அவருக்கு ஜீக் னு என்ற பெயரை வைக்கிறார்கள். ஜீக் னு என்ற இந்திப் படத்தின் remake தான் தமிழில் கமல் நடித்த "குரு" படம்.
மாலதி (கீவின் எம்)
மாலதி கதை சொல்லியின் அக்கா. விக்ரம் என்பவனுடன் திருமண உறவை முறித்து விட்டு தாய் வீட்டில் அதிகாரம் செய்து கொண்டிருப்பவள்.
கதைசொல்லி தன் அக்கா மாலதி பற்றி இவ்வாறு கூறுகிறான் ? "எங்கள் வீட்டில் எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் வெடிமருந்து போல் இருப்பவள் மாலதி. எங்கள் வீட்டின் பொருளாதார நிலை உயர்ந்ததும் இந்த வெடிமருந்துக்கு பணத்தின் பொறி தட்டியது "
மாலதியின் கணவன் விக்ரம் அப்படி ஒன்றும் கெட்டவன் இல்லை.அவன் குடும்பத் தொழிலான சேலை வியாபாரம் செய்கிறான் ஞாயிறு மட்டும் தான் அவனுக்கு விடுமுறை.ஆனால் இவ்வுலகில் தேவைப்படும் போதெல்லாம் அவளுடன் அவன் வர வேண்டும் என்ற பிடிவாதம் இருவருக்கும் இடைவெளியை ஏற்படுத்துகிறது.
எப்ப பார்த்தாலும் கடை கடைன்னு இருக்கிறான் என்று முணுமுணுக்கிறாள். கதைசொல்லி சொல்வது போல "அவளுடைய லட்சிய குடும்ப கனவில் எப்போதும் உழைக்கும் கணவன் இல்லை". ஆறு மாதம் கூட சரிவர குடும்பம் நடத்தாமல் வாழாவெட்டியாக வீட்டுக்கு வரும் தன் அக்காவை
"பணத்திமிர் சில கட்டாயங்களை சகித்துக்கொள்ளும் வலுவை அவளிடம் குறைத்திருக்கலாம்" என்கிறான் கதை சொல்லி.
மனிதன் பல சமயங்களில் நிர்ப்பந்தம் காரணமாகவே தன் கோபத்தை கட்டுப்படுத்துகிறான்.தன் கர்வத்தை விட்டுக் கொடுக்கிறான்.
ஒரு வேலைக்காரன் தன் முதலாளியிடம் பணிவைக் காட்டுவதும் ஒரு வியாபாரி தன் வாடிக்கையாளர்களிடம் பணிவாக நடந்துகொள்வதும் இந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்தான்.இந்த நிர்பந்தம், கட்டாயம் தன் கணவன் விக்ரமிடம் மாலதிக்கு ஏற்படுவதில்லை.காரணம் பணம். அவள் சகிப்புத்தன்மையை அவளுடைய புதுப் பணத்திமிர் உடைத்து விடுகிறது. மனித வாழ்வு சீராக இயங்க இந்த நிர்ப்பந்தமும், கட்டாயமும் அவசியமாகிறது.
தன் சித்தப்பா அனுப்பும் அடியாட்களின் ஆதரவுடன் தன் கணவன் விக்ரமின் வீட்டுக்குள் நுழைந்து தன்னுடைய நகைகளை எடுத்துக்கொண்டு தாலியை கழட்டி வீசி எறிந்து விட்டு வருவதை தன் வீட்டில் அமர்ந்து எல்லோரிடமும் பெருமையாக பேசும் இடம் நாவலில் மிக முக்கியமான இடம்.இது இன்றைய நவீன வாழ்வு முறையில் சகஜமாகிப் போன ஒன்று.
"அனிதா"
(சுறுசுறுப்பான எறும்பு )
அனிதா கதை சொல்லியின் மனைவி.ஹைதராபாத்தில் உள்ள ஒரு உதவிப் பேராசிரியரின் மகள். தன் கணவன் வேலைக்குச் சென்று உழைக்க வேண்டும் என்று விரும்புவள். அவளுடைய லட்சிய குடும்ப கனவில் எப்போதும் உழைக்கும் கணவன் வேண்டும் என்று விரும்புபவள்.
தன் கணவன் அவனுடைய சித்தப்பாவின் உழைப்புப் பணத்தில் வாழ்வதை அனிதா விரும்புவதில்லை. குடும்பம் முக்கியமான நபர் என கருதும் சித்தப்பா வெங்கடாசலத்தை சுஹாசினி நிகழ்வின் வழியே மறைமுகமாகப் பேசி அவர் மீது குடும்பம் கட்டி வைத்துள்ள மரியாதையை சாய்ப்பது போல் பேசுகிறார். குடும்பத்திற்கு சங்கடம் வரும்போது நிபந்தனைகள் இல்லாமல் ஆதரவு தரவேண்டும் என்ற எழுதாத நியதிகளை அனிதா முறிக்கிறாள். வீட்டில் கதை சொல்லியின் அம்மாவை நோக்கி ஏதாவது கேள்விகள் எழுந்தால் நான் இதையெல்லாம் எனக்காக செய்யறனா என்ன?இந்த வார்த்தை அவருடைய பிரபலமான ஆயுதம்.மிக இக்கட்டான தருணங்களில் இப்படியான வார்த்தைகளைச் சொல்லி வீட்டில் இருப்பவர்களின் வாய்க்கு வாய்கட்டு போட்டுவிடுவார்.
ஆனால் இம்முறை மட்டும் அனிதா அதே
கடினத்துடன் "ஆம் இதை உங்களுக்காகத்தான் செய்கிறீர்கள். உங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்த வீட்டில் வேறு யாரையும் நுழைய விடாமல் தடுக்க, அவருக்கு திருமணம் நடக்க விடாமல் " என சொல்லி கதையை சொல்லியின் அம்மாவினுடைய பிரம்மாஸ்திரத்தையே எதிர்த்து நிற்கிறாள்.
"வின்சென்ட்(Coffe house waiter)"
கதை சொல்லி அடிக்கடி சென்று அமரும் காப்பி ஹவுசில் பணிபுரியும் நடு வயதைத் தாண்டிய கருப்பு நிற வெயிட்டர்.நான்கு இடங்களில் மட்டுமே வின்சென்ட் கதைச் சொல்லியுடன் பேசுகிறான்.
ஒன்று:
கதை சொல்லி தன் முன்னாள் காதலி சித்ராவுடன் மனக்கசப்பு கொண்டு காபி ஹவுசில் அமர்ந்திருக்கும் போது வின்சென்ட்டிடம் இவன் பிரச்சனைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. இருந்தும் வின்சென்ட் முகத்தைப் பார்க்காமலேயே என்ன செய்யட்டும் வின்சென்ட்? என்று கதை சொல்லி கேட்கும் போது அதற்கு வின்சன்ட் விட்டு விடுங்கள் சார் என்கிறான்.
இரண்டாவது:
காப்ப ஹவுசில் தன் காதலனை கன்னத்தில் மாறி மாறி அறையும் ஒரு பெண்ணின் செயலைப் பார்த்து விட்டு கதை சொல்லி என்ன ஆச்சு? என
வின்சென்டிடம் கேட்கும் போது "சார் ஒரு கதைக்கு பல பரிமாணங்கள் இருக்கும் " என்று சொல்கிறான் வின்சென்ட்.
மூன்றாவது:
கதை சொல்லி தன் மனைவி இன்னும் ஊரில் இருந்து வரவில்லை என்ற சிந்தனையில் உட்கார்ந்திருக்கும்போது வின்சென்ட் கதைசொல்லியை பார்த்து சார் "Blood is thicker than water " என்கிறான்.
நான்காவது:
கதை சொல்லியைப் பார்த்து சார் "கையை கழுவுங்கள் உங்கள் கையில் ரத்தம் இருக்கிறது" என்கிறான்.
இந்த வின்சென்ட் கதாபாத்திரம் என்பது கதை சொல்லியினுடைய மனசாட்சி தான்.வின்சென்ட் ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளவனாக நாவலில் சித்தரிக்கப்படுகிறான்.
ஆனால் உண்மையில் கதை சொல்லியினுடைய உள் மன சாட்சியே வின்சென்ட் என்ற பாத்திரம்.
"மிருதுவாக தீட்டப்படும்
ஒரு சதித் திட்டம்"
சண்டை நிகழ்வின் அன்று மாலை எட்டு நாள் தங்க தன் தாய் வீடு ஹைதராபாத்திற்கு சென்று விடுகிறாள் அனிதா. அனிதாவை ரயில் ஏற்றி விட்டு வீட்டுக்கு வரும் கதைச்சொல்லி வீட்டின் சுவரை வெறுமையாய் வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தன் அம்மாவைப் பற்றி இப்படிக் கூறுகிறான்
"எப்போதோ ஒரு இரவு எங்கள் பழைய வீட்டு சமையலறையில் மண்டியிட்டு உட்கார்ந்து சுவற்றில் முகம் பதித்து எறும்புகளை தேடிக் கொண்டிருந்த அவரை பார்த்தது நினைவுக்கு வந்தது.என்னம்மா என்று அழைத்தேன் திடுக்கிட்டார்.அன்று இரவும் நான் அவரை அப்படித்தான் அழைத்திருந்தேன்.அன்றும் அவர் இப்படித்தான் திடுக்கிட்டார்.
என் அம்மா என்ன யோசித்துக் கொண்டிருப்பார் என்றும் நான் ஊகித்தேன்.அனிதா போகும் முன்பு வீட்டில் நடந்த தகராறில் மேலெழுந்த அழுக்கைத் துடைக்க வழிமுறைகளை தேடி கொண்டிருப்பார்" என்று.இது அவன் அம்மாவின் விருப்பத்தில் அனிதா மீண்டும் வீட்டுக்கு வரக்கூடாது என்பதே.
அனிதா தாய் வீடு சென்று மீண்டும் கணவன் வீடு திரும்புவதற்கு முந்தைய நாளில் கதை சொல்லியின் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து பக்கத்து வீட்டில் மனைவியை கொலை செய்த மஞ்சுநாத் பற்றியும்,ஒரு பெண்ணை அவளது புகுந்த வீட்டில் Gas வெடிக்க வைத்து கொலை செய்தது பற்றியும் பேசிக் கொள்கிறார்கள்.சுனிதா என்ற பெண் வேலைக்காரங்கக்கிட்ட பேசற மாதிரி அத்தை மாமா கிட்ட கத்தி பேசுவாளாம்.அதுக்காகவே அவளை கொலை செய்ததை பற்றியும் பேசிக் கொள்கிறார்கள்.
தாய் வீட்டிற்கு சென்று மீண்டும் கணவன் வீட்டிற்கு ரயில் டிக்கட் புக் செய்த அனிதா வீடு வந்து சேர்வதில்லை.ஒரு வேளை இந்த குடும்பத்தால் அனிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற யூகத்தை வாசிப்பவர்களின் மனநிலைக்கு விட்டு நாவல் முடிகிறது.நாவலின் பலமும் இதுதான். கதை கூறல் முறை, நறுக்கென்ற மொழிக் கூர்மை,இந்திய குடும்ப மனிதர்களின் உள்மன நிலை மீதான அவதானிப்புகள்,நாவலின் கச்சிதமான அளவு என அனைத்து கூறுகளும் இந்த நாவலை சிறந்த படைப்பாக்குகிறது.
இந்திய நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பணச்சுமை, பணச்சுமை உடைந்து அவர்கள் மேலெழும் போது பணத்தின் இயக்கத்தால் மாற்றம் கொள்ளும் அவர்களுடைய மனநிலை, குடும்ப பெண்களுக்குள் எழும் மன முரண்கள், இந்திய கூட்டுக் குடும்பங்களின் வாழ்வு முறை அதன் கலாச்சாரம் ஆகியவற்றை மிக நெருங்கி பேசுகிறது நாவல்.
கச்சிதமான,கூர்மையான சொல்லாடல்கள் தான் இந்த நாவலின் இன்னொரு பலம் என கருதுகிறேன்.
அவற்றில் சில
"கட்டாயங்களை விருப்பமாக காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று"
"சொல் அம்பின் கூர்மை மேலோட்டமாகத் தெரியும் எளிய வார்த்தைகளில் இருப்பதில்லை.அது அந்தரங்கத்தை குத்தி கீறும் நினைவுகளில் இருக்கும் "
"குருதி நீரினும் அடர்த்தியானது"
"நிறைவேற்ற முடியாத ஆசைகளும், தேர்வுகளும் இல்லாத இடங்களில் ஏமாற்றங்கள் இருப்பதில்லை"
"ஒரே ஒரு முறை கூட வரிசை முடிந்து, பின்பற்ற யாரும் இல்லாமல் இருக்கும் கடைசி எறும்பை நான் பார்த்ததே இல்லை"
"வார்த்தைகளை விட கண்ணுக்குத் தெரியாத ஆயுதம் வேறு என்ன இருக்கிறது?"
"முழுக் குடும்பமும் ஒரு உடலைப் போல மொத்தமாக கட்டிய கம்பியின் மீது நடப்பது போல் வாழ்ந்த நாட்கள் அவை "
"அடுத்தவர்களுக்கு அவர்களின் காலுக்கு கீழே கிடக்கிற பூசணிக்காய் தெரியாது ஆனால் மத்தவங்க காலுக்கு கீழே கிடக்கிற கடுகைத் தேடுவார்கள்"
"ஏதோ ஒரு சமநிலையில் இருந்த இந்த வீட்டின் உறவுகள் சில விஷயங்களில் குருடாக இருப்பதால் தான் வாழ்ந்து கொண்டிருந்தன "
"சாப்பிட்டு விட்டு தொடை இடுக்குல இருக்கிற வாலை சுருட்டிக் கொண்டு போ"
"பெண்ணின் அங்கங்களை தவிர ஆண்களுக்கு எதுவும் தெரியாது"
"மூன்று பேரும் நாள் முழுவதும் நாக்கை ரகசியமாகத் தீட்டுகிறார்கள்"
" பணம் நம்மை ஆட்டிவைக்கும் என்ற பேச்சு பொய்யல்ல.அதற்கும் ஒரு இயல்பு ,பலம் இருக்குமோ என்னமோ. குறைவாக இருக்கும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து, அதிகமானதும் அதன் வலு பெருகி நம்மையே ஆட்டி படைக்கும் என்று தோன்றுகிறது.
பணம் எங்களை தூக்கிக் கொண்டு சென்று புயலுக்கு நடுவில் போட்டது"
"செல்வம் பேயைப் போல ஆடக்கூடாது.
மரத்தைப் போல மெல்ல வளர வேண்டும்"
"தங்கள் எல்லைகளை காத்துக்கொள்ளும் நாய்களைப் போல அவர்கள் கத்தினார்கள்"
"இரு பெண்களும் சொற்களின் கத்திகளால் அவளை நிலத்தில் சாய்த்து உருட்டி குத்தி குத்தி தாக்குவது போல எனக்கு தோன்றியது "
தமிழில் ஆகச் சிறந்த பணியை இந் நாவலை மொழிபெயர்த்ததின் வழியே செய்திருக்கிறார் திரு.கே.நல்லதம்பி அவர்கள். சமகால புனைவு நாவல்களில் காச்சர் கோச்சர் மிகச்சிறந்த படைப்பு என கருதுகிறேன்.

Comments
Post a Comment