சந்திர மலை
சந்திர மலை- விபூதிபூஷண் பாந்தோபாத்யாய
எப்படி ஒருவரால் ஆப்பிரிக்க காடுகளை இவ்வளவு உற்று அவதானித்து எழுத முடிந்தது.இது சிறுவர் நாவல் அல்ல.சிறுவன் காட்டில் பயணம் செய்யும் பக்க எண்ணிக்கை குறைந்த இயற்கை தரிசனம் நிறைந்த பேரிலக்கியம்.
ஆப்பிரிக்க காட்டில் உள்ள குரங்கு வகைகள்,சிங்கங்கள்,மயக்கம் ஏற்படுத்தி பக்கவாதத்தை உண்டாக்கும் ஒருவித விஷ கொடிகள்,கடுப்பு மாம்பா எனப்படும் விஷப் பாம்புகள்,பல்வேறு பழங்குடிகள்,பல்வேறு மலர்கள் என காட்டின் முடிய ரகசியத்தை நம் முன் விரித்துக் கொண்டே செல்கிறது ரிக்டர்ஸ்வெல்ட் மலைத் தொடர்.
இவ்வளவு சாகசமும்,காடு சார்ந்த பயணமும் கொண்ட ஒரு நாவலை அந்த நிலப்பரப்பின் பூகோள தரவுகளோடும் அந்த நிலக் காடுகளில் வசிக்கும் தாவர மற்றும் வன
ஜீவன்களின் குறிப்புகளோடு எழுதப்பட்டுள்ள இந்த நாவல் சிறுவர் மட்டும் வாசிக்கக் கூடியது அல்ல.ஒரு வங்காள சிறுவன் ஆப்பிரிக்க காடுகளில் வைரம் தேடி அலையும் பயணத்தை உயிர்ப்புள்ளி சுருங்க சாகசம் நிறைந்த ஒரு கதையாக எழுதியுள்ளார் விபூதி பூஷண்.
காட்டில் சாப்பாட்டுக்கு இல்லாமல் குகையில் மாட்டிக் கொள்ளும் சங்கர் தன்னுடைய Shoe வின் அடிப்பகத்தை பிய்த்து தின்னுவான்.
எப்பொழுதுமே இயற்கைக்கும் காட்டு விலங்குகளுக்கும் ஒருவித தொடர்பு உண்டு.
காட்டில் ஓரிடத்தில் இரவில் கூடாரம் போட்டு தங்கிக் கொண்டிருக்கும் ஆல்வாரெஸ்,சங்கர் இருவருக்கும் முன்னால் இருட்டில் பல்வேறு காட்டு விலங்குகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெற வேகமாக ஓடிக் கொண்டிருக்கும்.ஏன் இப்படி காட்டு விலங்குகள் தறி கெட்டு ஓடுகிறது என்பதை புரியாமல் பார்த்து இருவரும் நிற்கும் போது மிகப்பெரிய ஓசையுடன் எரிமலை வெடிக்கும் சத்தம் கேட்கும்.இயற்கை நிகழ்த்தும் பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் விலங்குகளுக்கு உண்டு.
சாகச வகை நாவல்களான moby Dick,The old man and the Sea ,அவன் காட்டை வென்றான் போன்ற நாவல்களைப் போல மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்குமான சமர் தான் இந்த நாவலின் கதையும்.
சந்திர மலை நாவலிலும் வைரத்தை தேடிச்செல்லும் ஆத்திலியோ காத்தி,ஜிம் கார்டர்,ஆல்வாரெஸ் போன்ற நிறைய மனிதர்கள் இறந்து போகிறார்கள்.ஆத்திலியோ காத்தியின் சப்பாத்துக்கடியில் இருக்கும் ஐந்து வைரக்கற்களோடு நாகரிக உலகிற்கு திரும்பும் வங்களா சிறுவன் சங்கர் இயற்கையிடம் தோற்றுப் போகிறான்.கடைசியில் இயற்கை தான் வெல்கிறது.
Comments
Post a Comment