Moby Dick (1956) Movie

நேற்று இரவு Amazon Prime ல் Herman Melville எழுதிய Moby Dick நாவலை john huston அதே பெயரில் எடுத்த படத்தைப் பார்த்தேன்.1841 ல் நடப்பதாக நிகழும் கதை கொண்ட இப்படம் 1956 ல் எடுக்கப்பட்டுள்ளது.வாசிக்கும் போது நாவல் கொடுக்கும் அதே அக சிலிர்ப்பை படமும் கொடுக்கிறது.



Moby Dick எனப்படும் ராட்சத வெள்ளைத் திமிங்கலத்தை வேட்டையாடும் கேப்டன் ஆகாப் என்பவனின் கதையை இஸ்மாயில் என்பவனின் பார்வையில் படம் விவரிக்கிறது.


கிட்டத்தட்ட கிழவனும் கடலும் நாவலைப் போன்றே கடலை களமாக கொண்ட நாவல் இது.இரண்டு நாவலுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை கிழவனும் கடலும் நாவலில் வரும் சாண்டியாகோ கிழவனும்,Moby Dick நாவலில் வரும் கேப்டன் ஆகாப்பும் இயற்கையிடம் போராடி தோற்கிறார்கள்.


வெள்ளைத் திமிங்கலத்தின் உடலில்  தோலுக்கு அடியில் உள்ள பிளப்பர் என்ற பகுதி இயந்திரங்களுக்கு எரிபொருளாகவும்,வயிற்றுப் பகுதியில் உள்ள அம்பர்கிரீஸ் வாசனை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுவதால் வெள்ளைத் திமிங்கலங்கள்  அதிக அளவில் வேட்டையாடப்படுகிறது.


Moby Dick நாவல் நான் வாங்கியதே ஒரு சுவாரஸ்யமான கதை.நாவல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.பதிப்பில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.



பிறகு கடைசியில் ஒரு புத்தக கடையில் கிடைத்தது.பெரிய நாவலான இதை தமிழில் சுருக்கப்பட்ட வடிவில் எழுதி இருந்தாலும் சுவராஸ்யமாக இருக்கிறது.


https://ashvanthashmitha.blogspot.com/2021/03/moby-dick.html

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்