புனைவும் நினைவும்-சமயவேல்

 எழுத்தாளர் சமயவேல் எழுதிய புனைவும் நினைவும் (வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்) நூலின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.



இதிலுள்ள இரண்டு கட்டுரைகளை வாசிக்கையிலேயே என் நினைவின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் என் கிராம வாழ்வின் அத்தனை நினைவுகளையும் கீறி விட்டு என்னை மீண்டும் என் கிராமத்துக்குள் கூட்டிச் சென்றது போன்ற ஒரு பிரக்ஞை.


மாரியம்மன் கூழ் ஊற்றும் திருவிழாவில் குடித்த மாரியம்மன் கூழின் புளித்த சுவையும்,எல்லா வீட்டின் தாம்பளத்திலுமிருந்து அள்ளித் தின்ற துள்ளு மாவின் இனிப்பும் இன்னும் அடி நாக்கில் ஒட்டியிருப்பதாக ஒரு உணர்வு.


காலில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட என் சம வயதினன் பெருமாளின் அக்கா புட்டியம்மாவின் மீன்கள் தின்றரித்த முகத்தை இப்போதும் காலவெளியில் பின்னோக்கிச் சென்று என்னால் பார்க்க முடிகிறது.எல்லோருக்குள்ளும் நினைவாக அனுபவமாக எஞ்சியிருக்கும் கிராம வாழ்வினை அசை போட அழைக்கிறது இந்த புத்தகம்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்