கருப்பு வெள்ளை கலந்த நிறம் எல்லா நிறங்களையும் தனக்குள் விழுங்கி நிழல் நிறத்தில் நிற்கும் ஒரு நிறம்.அது கண்களின் நிறம்.கருப்பு நிறம் எனக்கு எப்போதும் பிடித்த நிறம்
ஆக்காண்டி-வாசு முருகவேல் ஈழ இலக்கியம் என்றாலே சிங்களவர்கள் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இன அழிப்பு குறித்து மட்டுமே எழுதப்படும் என்பது எல்லோருக்குமான ஒரு மேலோட்டமான பார்வை. தமிழீழ விடுதலைக்காக உருவான தமிழ் இயக்கங்களுக்கு இடையேயான முரண்கள்,ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த நிலமிழந்து அலையும் அலைகழிப்புகள்,ஓலங்கள்,ஒப்பாரிகள் என நிறைய ஈழ இலக்கியங்கள் சிறுகதை வடிவிலும் நாவல் வடிவிலும் ஷோபா சக்தி,சயந்தன்,குணா கவியழகன் போன்றவர்களால் பாரிய கோணங்களில் எழுதப்பட்டுள்ளது. வாசு முருகவேலின் ஆக்காண்டி நாவல் இலங்கை தமிழ் இஸ்லாமியர்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையேயான முரணைப் பேசுகிறது.சோனகர்கள் எனப்படும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் இலங்கை ராணுவத்துக்கு அனுசரணையாக இருந்து தமிழர்களின் உடைமைகளை அபகரித்து கொடுமைப் படுத்தினார்கள் என்ற தொனியில் நாவல் நிறைய நிகழ்வுகளை பதிவு செய்கிறது. அதிகாரமும் சூழ்ச்சியும் கொண்ட சிங்கள ராணுவம் இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் இன முரணையும் பகையையும் ஊதிப் பெருக்கியது என்பதை நாவலின் மையமாக கொள்ளலாம். நாவலின் 87 வது பக்கத்தில் "இலங்கையின் முப்படை தலைவரையே ...
///தஸ்தாயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை முன்வைத்து உலக மொழிகளில் உள்ள உன்னத உயர் இலக்கியங்கள் என பத்துக்குள் வரிசைப்படுத்தினால் ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்,அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் ஆகிய மூன்று நாவல்கள் நிச்சயம் இடம்பெறும். தஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிப்பதின் வழியே ஒருவன் உலகின் ஒட்டுமொத்த மானுட மனங்களை வாசித்துவிட்ட பேரனுபவத்தை அடைகிறான். மானுட ஆன்மாவின் ஆழங்களில் நடந்து அதன் கீழ்மையை கிழித்து நம் முன் வைப்பவர் தஸ்தயேவ்ஸ்கி. குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்னிவ், அசடன் நாவலில் வரும் மிஷ்கின், கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் அல்யோஷா பாத்திரங்கள் வழியே அவர் மானுடத்திற்கு வலியுறுத்துவது அன்பையும், மனிதநேயத்தையும் தான். குற்றமும் தண்டனையும் நாவலில் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் கிழவியையும் அவளது தங்கையையும் கொலை செய்துவிடும் ரஸ்கோல்னிவ் சட்டம் பயின்ற அறிவு நுட்பமானவன். தான் செய்த குற்றத்தை நியாயப்படுத்தி அதை ஏற்றுக்கொள்ளாமல் தப்பிக்கிறான். கடைசியில் அவனுடைய அறிவுக்கும் சோனியா என்ற பெண்ணின் அன்புக்கும் இடையே நிகழும் தர்க்கத்தில் கடைசியி...
///இந்திய செவ்வியல் ஆக்கங்களில் நான் வாசித்த வரை சிறந்த நாவல்களாக கன்னடத்தில் சிவராம் காரந்த் அவர்களால் எழுதப்பட்ட "மண்ணும் மனிதரும்" மற்றும் "அழிந்த பிறகு" நாவல்களைச் சொல்வேன். சிவராம காரந்த் கலை, இலக்கியம், சினிமா,நடனம் (யகஷகானா) ஆகிய பல்வேறு கலை வடிவங்கள் மூலம் கன்னட மொழிக்கு பெரும் பங்காற்றியவர். மண்ணும் மனிதரும் நாவல் ஒரு பிராமணர் குடும்பத்தில் உள்ள பெண்கள் படும் துயரை எதார்த்த மீறலும்,மிகையுமின்றி பதிவு செய்த பேரிலக்கியம் என்பேன்.. அழிந்த பிறகு ஒரு நவீனத்துவ நாவல்.தன் நண்பர் யசுவந்த ராயர் மரணத்திற்கு பின் அவருடன் பழகிய நினைவுகளை சுமந்து யசுவந்தரின் குடும்பங்களை சொந்தங்களை தேடிச் செல்லும் ஒரு நவீன புனைவு நாவலே அழிந்தபிறகு. நாவலில் யசுவந்தரின் உறவுகளைத் தேடி செல்பவராக சிவராம் காரந்தே வருகிறார். குடும்பங்களுக்குள் இருக்கும் மனிதர்களின் மன பகையை, அது உடையும் இடங்களை மிக நுட்பமாக எழுத்தாக்கியிருப்பார் சிவராம காரந்த் அழிந்த பிறகு நாவலில். நான் தமிழில் படிக்க தேடி கிடைக்காத நாவல் சிவராம் காரந்த் எழுதிய "சோமன துடி" நாவல். சோமன துடி என்ற பெயரிலேயே அதை படமா...
Comments
Post a Comment