பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்


 மயிலன் ஜி.சின்னப்பன் எழுதிய பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் நாவலை முன் வைத்து:


மருத்துவ மேற்படிப்பு படிக்கும் பிரபாகரன் என்ற மாணவனின் தற்கொலையை அவன் மரணத்திற்கு பின்பாக அவனைச் சுற்றியுள்ளவர்களின் ஒவ்வொருவரின் பார்வைகளின் வழியாக தற்கொலைக்கான காரணங்களை பல்வேறு கோணங்களில் பதிவு செய்கிறது நாவல்.


ஒரு வகையான குற்றப்புலனாய்வு நாவல் போன்று தோன்றினாலும் உள்ளே உளவியல் நோக்கு தன்மை கொண்ட நாவல் இது.


மயிலன் அடிப்படையில் மருத்துவர் என்பதால் மருத்துவ உலகம் குறித்த விவரணைகள்,விஷயங்கள் எல்லாம் நமக்குள் ஒரு வித நம்பகத்தன்மையை உண்டாக்கி விடுகிறது.


நாவலில் மயிலன் கையாளும் மொழி சாதாரண மொழி தான் என்றாலும் நாவலுக்கான தேவை மீறாத கச்சிதமான மொழியையும், வரிகளையும் மயிலன் பயன்படுத்தியுள்ளார்.


ஒரு விபத்தில் ஏற்படும் மரணமோ அல்லது இன்ன நோயில் தான் இறந்தார் என்ற வகையிலான மரணமோ அந்த மரணத்திற்கான மேலான காரணங்களை  சமூகம் வேண்டி நிற்பதில்லை.


ஆனால் தற்கொலை அப்படி அல்ல.அது சமூகத்தின் வாய் அசைபோட நிறைய விஷயங்களை விட்டுச் சென்று விடுகிறது.அப்படி ஒருவனின் தற்கொலையை அவரவர் வசதிக்கேற்ப அவர்களுடைய மனங்கள் உளவியல் பார்வையில் அணுகுவதை நாவலாக்கியுள்ளார் மயிலன்.


ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மருத்துவ உலகத்தின் இன்னொரு பக்கம்,மருத்துவர்களின் உளவியல் ஆகியவற்றை

சொல்ல முயன்றிருக்கிறார் மயிலன்.


ஒரு விறுவிறுப்பான ஒரு மன விசையுடன் நம்மை முன் செலுத்தும் நாவல்.

 


இந்த நாவல் போன்றே மருத்துவர்கள்,மருத்துவமனை உலகத்தை பின்புலமாக வைத்து புனத்தில் குஞ்ஞப்துல்லா மருந்து என்ற நாவலை எழுதியிருப்பார். நிஜத்தில் அவரும் ஒரு மருத்துவர் தான்.மருந்து நாவலும் ஒரு நல்ல நாவல்.


பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் நாவல் பிரபாகரனின் தற்கொலையை அவன் மரணத்திற்கு பிறகு சதாசிவம், அன்வர்,மணி,லீமா, பாஸ்கர்,நாஸியா ஆகிய மனங்களின் வழியே உளவியல் ரீதியாக கூராய்வு செய்வதன் வழியாக ஒரு நல்ல நாவல் என்ற அடையாளத்தை பெறுகிறது.


Velu malayan

17.8.2022.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்