அனல் காற்று

///ஜெயமோகனின் அனல் காற்று நாவலை முன்வைத்து ஆண் பெண் உறவின் சிக்கலை,அதன் உள்ளிருக்கும் காமத்தை,அதன் உளவியலை தமிழில் சற்றே நெருங்கி எழுதிய எழுத்தாளர் என தி.ஜானகிராமனைச் சொல்லலாம். இது நாள் வரை சமூகம் சரியென கட்டி வைத்திருக்கும் ஒழுக்க விதிகளின் மீறல் தான் தி.ஜா படைப்புகளின் அடிநாதம். மனித மனம் எதையும் மீறிப் பார்க்க திரியும் ஒரு மிருகம்.மீறல் ஒரு சுவாரஸ்யம்.மீறல் ஒரு துடுக்குத் தனம்.மீறல் ஒரு சாகசம். அருண் என்பனின் அந்த மீறல் தான் அனல் காற்று நாவலின் உள்ளிருக்கும் வெப்பம். அடுத்து தமிழில் குறைவாக எழுதினாலும் மனித மனங்களின் அடித்தளங்களில் இருந்த சின்ன தனங்களையும், காமத்தையும் வெளிப்படையாய் எழுதியவர் எழுத்தாளர் ஜி.நாகராஜன். குறி நுழைத்தலும்,குறி நுழைத்துக் கொள்ளுதலும் மட்டுமே குறிக்கோளாய் இருந்த ஆதி குரங்கினத்தின் நாகரிக நகல்கள் நாம். ஆண் பெண் கூடி வாழ்தலின் மைய விசையாக இருப்பது காமம் தானே. காமத்தை வெளிப்படையாய் ஏற்றுக் கொள்ள தயங்கும் சமூகம் இது. ஒருவனின் சூழலும்,வாழிடமும் தான் அவனை வழி நடத்துகிறது.அப்படி பெண்கள் மத்தியில் வளர்க்கப்படும் ஒருவனின் காதலும்,காமமும் கலந்த Extr...