எழுத்தாளர் இமையம் எழுதிய எங்கதெ நாவல்

எழுத்தாளர் இமையம் எழுதிய "எங்கதெ" நாவலை முன்வைத்து ///2019ஆம் ஆண்டு சேலத்தில் உள்ள பாலம் வாசகர் சந்திப்பு ஒருங்கிணைத்த எழுத்தாளர் இமையம் அவர்களின் கோவேறு கழுதைகள் நாவலின் 25 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இமையம் அவர்கள் கலந்து கொண்டார்.நானும் அந்நிகழ்வில் கலந்துகொண்டேன். கோவேறு கழுதைகள் நாவலின் மீதான பார்வையை எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் விரிவாகப் பேசினார். எழுத்தாளர் இமையம் அவர்களின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது "கோவேறு கழுதைகள்" நாவலும்,"பெத்தவன்" நெடுங்கதையும் தான். கோவேறு கழுதைகள் நாவலில் ஆரோக்கியம் என்ற தலித் கிருத்துவப் பெண்ணின் சுரண்டலை எழுதிய இமயம்,பெத்தவன் நெடுங்கதையில் சாதி மாறி திருமணம் செய்துகொள்ள நினைக்கும் ஒரு மேல்சாதி பெண்ணின் தகப்பன் பழனி பாத்திரம் வழியே இறுகி போகியிருக்கும் சாதிய நஞ்சு மனங்களின் மீது கல்லெறிகிறார். இமயம் அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது கோவேறு கழுதைகள் நாவலை நான் எழுதும்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். பயம் தெரியாத ஒரு குழந்தை மலைப்பா...