மிகெய்ல் நைமி எழுதிய "அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்" நூலை முன்வைத்து
மிர்தாத்தின் புத்தகம்
(The book of Mirdad) வாசிப்பு தான்
மிகெய்ல் நைமி மீது எனக்கு ஒரு பெருத்த ஈர்ப்பு ஏற்பட காரணமாக இருந்தது.
மிர்தாத் புத்தகம் தத்துவ சாரங்களை தேக்கி வைத்திருக்கும் ஒரு ஞான கோப்பை.ஞானப்புதையல்.
ஓஷோ கூறியது போலவே அது இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம் தான்.
லெபனான் நாட்டைச்சேர்ந்த மிகெய்ல் நைமி புகழ்பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான கலீல் ஜிப்ரானின் சமகால நண்பர்.
கலில் ஜிப்ரானுக்கு தீர்க்கதரிசி
(The Prophet) எப்படி புகழ் பெற்ற படைப்போ அப்படி மிகெய்ல் நைமிக்கு The book of mirdad.
நவீன உருது இலக்கியத்தின் மிக முக்கியமான ஆன்மீக நூலாக கருதப்படுவது மிகெய்ல் நைமியின் "மிர்தாதின் புத்தகம்".
அப்படிப்பட்ட மிகெய்ல் நைமி 1916 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் சிரியாக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு காப்பிக் கடையில் நண்பருடன் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த காப்பிக் கடையில் வேலை செய்த ஒரு பெயரற்ற அம்மை முகத்துக்காரன் விட்டுச் சென்ற டைரிக் குறிப்புகளை அந்த காப்பிக் கடை முதலாளியிடமிருந்து பெற்று ஆங்கிலத்தில் "Memories of a Vagrant Soul or The Pitted Face" என்று எழுதியதின் தமிழ் வடிவமே
"அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்".
நினைவுக்குறிப்புகளை எழுதி விட்டுச்சென்ற அம்மை முகத்துக்காரன் எந்த மதத்தைச் சேர்ந்தவன்,எந்த ஆண்டு அதை எழுதினான் என்ற விவரங்களற்று வெறும் கிழமைகளை மட்டும் குறிப்பிட்டு எழுதி இருந்ததாக குறிப்பிடுகிறார் மிகெய்ல் நைமி.
மூன்றாண்டுகள் காப்பிக் கடையில் பணிபுரிந்த அம்மை முகத்துக்காரன் தன்னுடைய காபி கடை முதலாளி, தன்னுடைய நண்பர் சென்னா செரீப் ஆகியோரைப் பற்றிய தத்துவ நினைவுகளின்,உரையாடல்களின் பதிவு தான் இந்த புத்தகம் .
அம்மை வந்த தழும்புகள் முகத்தில் இருப்பதால் அவனை அம்மை முகத்துக்காரன் என்றே கூப்பிடுகிறார்கள்.
அவன் ஒரு பெயரற்றவன்.
அவன் இப்படிக் கூறுகிறான்
" எனக்குப் பெயர் இல்லை.
ஒற்றை பெயர் கொண்டு என்னை அழைப்பது எனக்கு சம்மதமில்லை.
ஒவ்வொரு கணமும் நான் ஒரு புதிய மனிதன்.
ஒவ்வொரு கணத்திலும் எனக்குள் ஒரு புதிய சிந்தனை உதிக்கின்றது.
நான் எப்படி தோன்றுகிறேனோ அதுவல்ல நான்.
என்ன சிந்திக்கிறேனோ அதுதான் நான்"
இந்நூல் வாழ்வின் அகத் தேடலுக்கான திறப்புகளைப் பேசுகிறது.
உண்மையை பேசும் ஒருவனின்
உள்ள உளறல்கள்.
உண்மையையும்,தத்துவத்தையும் திகட்டத் திகட்ட புகட்டுகிறது.
வாசிப்பவரின் இதயத்தை ஞானத்துளிகளால் நனைய வைக்கும் நூல்.
நூலில் உள்ள ஞானத்துளிகள் சில
மனதைக் கொண்டிருக்கும் ஓர் உடல் அல்ல நான்.மாறாக ஓர் உடலைக் கொண்டிருக்கிற மனம் தான் நான்.
"வாழ்க்கை மாளிகையைக் கட்ட பணம் அடித்தளமாக அமையாது "
"திருமணம் என்பது காதலின் சவதகனம்"
என நிறைய தத்துவ தெறிப்புகள் நூல் எங்கும்.
மிர்தாதின் புத்தகத்திற்கு இது இணையில்லை என்றாலும் தத்துவங்களில் மனம் இணைந்து போகும் அளவுக்கான ஒரு நல்ல அகத் தேடல் உள்ளவர்களுக்கான புத்தகம்
இது.
கவிஞர் புவியரசு அவர்களின் மொழியாக்கம் நிறைவாக இருக்கிறது///

Comments
Post a Comment