பள்ளிப் பாட புத்தகங்கள் வழியாகவும், நீதிக்கதைகள் வழியாகவும் நம் சிந்தனைக்குள் புத்தரைப் பற்றி புகுத்தப்பட்ட அத்தனைத் தகவல்களைத் தாண்டி ஒரு நவீனத்துவ பார்வையில் புத்தரின் வாழ்கை வரலாற்றைச் சொல்கிறது "தம்மம் தந்தவன்" நூல்.

நேபாளத்தில் பிறந்து இந்தியாவில் இறந்து பல்வேறு தேசங்களின் மதமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் கௌதம புத்தரின் கதையை நவீனத்துவ பாணியில் சமகால நிகழ்வுகளுடன் பொருத்திப் பேசும் இந்நூல் ஒரு ஆச்சர்ய ஆக்கம்.

ஒரு மகனாக ,கணவனாக,தந்தையாக இருந்து பந்தங்களின் பற்றைத் துறந்து துறவியான தூயவனின் வரலாற்றை அவன் சாலமரத்தின் அடியில் மாயா தேவிக்கு  மகனாக பிறந்து அரச மரத்தடியில் ஞானம் பெற்று தம்மம் தந்தததை வரலாறு கலந்த புனைவில் நாவலாக்கியிருக்கிறார் மராத்தி எழுத்தாளர் விலாஸ் சாரங்.

ஞான ஒளி பெற உண்ணாமல் தன் மனதையும் உடலையும் அங்குல அங்குலமாய் சுயவதைக்கு ஆட்படுத்தி மாட்டு சாணத்தையும் சரிவர செரிக்காத தன்னுடைய மலத்தையும் உண்கிறார் புத்தர்.

நாட்டை, தந்தையை,தன் மனைவியை துறந்து வெளியேறிய புத்தர் மீண்டு கபிலவஸ்துவிற்கு வந்து தன் எட்டு வயது மகன் ராகுலையும் தன்னுடன் துறவியாக்கி அழைத்துச் செல்கிறார்.

The Dhamma man என்ற தலைப்பில் விலாஸ்சாரங் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் காளிப்ரஸாத்.

மொழி மாற்ற நாவல் என்ற எண்ணம் எழாத ஒரு அற்புதமான மொழிபெயர்ப்பை செய்துள்ளார் காளிப்ரஸாத் .நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.

அதேபோல் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய "சித்தார்த்தன்"நாவலும் புத்தரை மையப்படுத்தியது தான்.ஆனால் அது வீட்டைத் துறந்து தான் புத்தன் ஆகலாம் என துறவு கொள்ளும் ஒரு அந்தண குமாரனை பற்றியது அந்த நாவல்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்