Posts

பருவம்

Image
 கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் கடந்து ஒரு வழியாக 928 பக்கங்கள் கொண்ட பருவம் நாவல் இன்றுடன் முடிந்தது. மனிதர்களின் உணர்ச்சி தருணங்கள்,மனித மனங்களில் படியும் அகங்காரம்,குரோதம்,வன்மம், துரோகம்,பழியுணர்ச்சி உறவுகளின் முரண்கள் என மானுடத்தின் மனப் பேரோலத்தை நம் முன் விரித்து காட்டும் ஒரு பேரிலக்கியம் மகாபாரதம்.எஸ்.எல். பைரப்பா தன்னுடைய பார்வையில் சாதாரண மனிதர்களின் கதையாக மகாபாரதத்தின் கதையை எடுத்துக்கொண்டு அதன் பாத்திரங்களை தன்னுடைய பார்வையில் விவரிக்கிறார். எல்லா நதிகளுக்கும் ஊற்று இமயமலை என்பது போல,எல்லா கதைகளுக்கும் ஊற்று மகாபாரதம் தான்.அது myth ஆகவே கூட இருந்தாலும்.மகாபாரதம் மானுட வாழ்வின் ஆவணம்.

Moby Dick (1956) Movie

Image
நேற்று இரவு Amazon Prime ல் Herman Melville எழுதிய Moby Dick நாவலை john huston அதே பெயரில் எடுத்த படத்தைப் பார்த்தேன்.1841 ல் நடப்பதாக நிகழும் கதை கொண்ட இப்படம் 1956 ல் எடுக்கப்பட்டுள்ளது.வாசிக்கும் போது நாவல் கொடுக்கும் அதே அக சிலிர்ப்பை படமும் கொடுக்கிறது. Moby Dick எனப்படும் ராட்சத வெள்ளைத் திமிங்கலத்தை வேட்டையாடும் கேப்டன் ஆகாப் என்பவனின் கதையை இஸ்மாயில் என்பவனின் பார்வையில் படம் விவரிக்கிறது. கிட்டத்தட்ட கிழவனும் கடலும் நாவலைப் போன்றே கடலை களமாக கொண்ட நாவல் இது.இரண்டு நாவலுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை கிழவனும் கடலும் நாவலில் வரும் சாண்டியாகோ கிழவனும்,Moby Dick நாவலில் வரும் கேப்டன் ஆகாப்பும் இயற்கையிடம் போராடி தோற்கிறார்கள். வெள்ளைத் திமிங்கலத்தின் உடலில்  தோலுக்கு அடியில் உள்ள பிளப்பர் என்ற பகுதி இயந்திரங்களுக்கு எரிபொருளாகவும்,வயிற்றுப் பகுதியில் உள்ள அம்பர்கிரீஸ் வாசனை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுவதால் வெள்ளைத் திமிங்கலங்கள்  அதிக அளவில் வேட்டையாடப்படுகிறது. Moby Dick நாவல் நான் வாங்கியதே ஒரு சுவாரஸ்யமான கதை.நாவல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.பதிப்பில் இல்லை என்று சொல்லிவிட்டார்

வம்ச விருட்சம் -எஸ்.எல்.பைரப்பா.

Image
எஸ்.எல்.பைரப்பாவின் வம்ச விருட்சம் நாவலை முன் வைத்து: தனது திரை(Avarana) நாவல் குறித்து பேசும் போது வரலாற்று பொய்களை முன்வைப்பதன் மூலம் தேசியவாதத்தை ஒருபோதும் வலுப்படுத்த முடியாது" என்கிறார் எஸ்.எல்.பைரப்பா. சரித்திரப் புள்ளி விவரங்களில் எனது சொந்தக் கற்பனை எதுவும் இல்லை எனும் S.L.பைரப்பா  "நமது முன்னோர்களின் எந்தெந்தச் செயல்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்த சாதனைகளினால் கவரப்படவேண்டும் என்கிற விவேகம் இல்லாமல் இருந்தால் நாம் வளருவதில்லை.சரித்திரத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்வது போலவே, அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதும் ஒரு முதிர்ச்சியின் அறிகுறி.இது ஒவ்வொரு மதம், ஜாதி,குழுக்களுக்கும் பொருந்தும் ஒரு வாசகம்" என்கிறார். திரை(Avarana) நாவலில் அமீரும்,லட்சுமியும்(ரஷியா) இருவரும் இஸ்லாமிய இந்து கலாச்சார விவாதங்களின் குறியீடுகள். வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இஸ்லாம் குறித்து நம் முன் நம்ப வைக்கப்பட்ட போலியாக போர்த்தப்பட்ட வரலாற்றின் மீதான திரையை விலக்கும் முயற்சியான திரை(ஆவரணா) போன்ற நாவலை தமிழில் எந்த எழுத்தாளரும் எழுதி விட முடியாது.அந்த அறிவு துணிச்சலும் நேர்மையும் எஸ்

பாபாசாஹேப் -அம்பேத்கருடன் என் வாழ்க்கை :சவிதா அம்பேத்கர்

Image
 பாபாசாஹேப்: அம்பேத்கருடன் என் வாழ்க்கை - சவிதா அம்பேத்கர் நூலை முன் வைத்து: அம்பேத்கர் எனும் பேராளுமை குறித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்தும் பொது வெளியில் அவர் குறித்து நிறுவப்பட்டுள்ள பிம்பங்களிலிருந்தும் இந்த புத்தகம் வேறு ஒரு கோணத்தில் அவரை அணுகும் வாய்ப்பாக எழுதப்பட்டுள்ளது. மருத்துவம் படித்த சாரஸ்வத் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சவிதா என்பவர் 1948 ல்அம்பேத்கர் திருமணம் செய்து கொள்கிறார்.1948 முதல் 1956 வரையான எட்டு ஆண்டுகளில் அம்பேத்கருடன் தான் வாழ்ந்த எட்டு வருடங்களின் வாழ்க்கை பதிவாக சவிதா அம்பேத்கர் அவர்களால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்பு சிற்பியாக,சட்ட அமைச்சராக,தொழிலாளர் அமைச்சராக,பொருளாதாரம்,இலக்கியம்,வரலாறு என பல்வேறு துறைகளில் பேரறிவு கொண்டிருந்த அம்பேத்கரின் வெளியில் தெரியாத ஆளுமைகளை இந்த புத்தகத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது. அவர் தன் மனைவி சவிதா அம்பேத்கருக்கு எழுதிய பல்வேறு காதல் கடிதங்களில் அவர் எவ்வளவு காதல் மனம் கொண்டவர் என்பதை அறிய முடிகிறது. உலகின் மிகப்பெரிய அறிவாற்றல் கொண்ட ஆறு மனிதர்களில் ஒருவராக கருதப்படும் அம்பேத்கருக்கு கார் ஓட்டத்

புனைவும் நினைவும்-சமயவேல்

Image
 எழுத்தாளர் சமயவேல் எழுதிய புனைவும் நினைவும் (வெட்ட வெளியில் ஒரு கரிசல் கிராமம்) நூலின் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரண்டு கட்டுரைகளை வாசிக்கையிலேயே என் நினைவின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் என் கிராம வாழ்வின் அத்தனை நினைவுகளையும் கீறி விட்டு என்னை மீண்டும் என் கிராமத்துக்குள் கூட்டிச் சென்றது போன்ற ஒரு பிரக்ஞை. மாரியம்மன் கூழ் ஊற்றும் திருவிழாவில் குடித்த மாரியம்மன் கூழின் புளித்த சுவையும்,எல்லா வீட்டின் தாம்பளத்திலுமிருந்து அள்ளித் தின்ற துள்ளு மாவின் இனிப்பும் இன்னும் அடி நாக்கில் ஒட்டியிருப்பதாக ஒரு உணர்வு. காலில் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட என் சம வயதினன் பெருமாளின் அக்கா புட்டியம்மாவின் மீன்கள் தின்றரித்த முகத்தை இப்போதும் காலவெளியில் பின்னோக்கிச் சென்று என்னால் பார்க்க முடிகிறது.எல்லோருக்குள்ளும் நினைவாக அனுபவமாக எஞ்சியிருக்கும் கிராம வாழ்வினை அசை போட அழைக்கிறது இந்த புத்தகம்.

ஜனவரி 2024 ல் வாசித்தவை

 ஜனவரி 2024 ல் வாசித்தவை: 1.கிளைக்கதை-சுரேஷ் பிரதீப் 2.குரவை-சிவகுமார் முத்தையா 3.வீரன் குட்டி கவிதைகள்- வீரன் குட்டி தமிழில்: சுஜா 4.நினைவின் குற்றவாளி - ஷங்கர ராமசுப்ரமணியன் 5.தேவதையின் மச்சங்கள் கருநீலங்கள்-கே.ஆர்.மீரா 6.கோதம புத்தர் -ஆனந்த குமாரசாமி 7.மாயாதீதம்-என்.ஸ்ரீராம் 8.நீர்ப்பறவைகளின் தியானம்- யுவன் சந்திரசேகர் ❤️

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்

Image
 என்.ஸ்ரீராம் எழுதிய மாயாதீதம் நாவலை முன்வைத்து: என் பெரியப்பாவின் கடைசி மகள் பெயர் மகேஸ்வரி.அவள் என் வயதொத்தவள்.அவளுக்கு ஒரு கண் பூ விழுந்தது போல் வெண்மையாக பார்வையற்று இருக்கும். அவள் தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கண் அவளுக்கு நன்றாக தெரிந்துக் கொண்டு தான் இருந்தது.என் பாட்டி சந்திரமதி தான் அவளை கோயில் குளம் என கூட்டிச் சென்று தீர்த்தமலை தீர்த்தத்தை எல்லாம் கண்ணில் விட்டு அந்த இன்னொரு கண்ணும் காணும் திறனை இழக்க வைத்தாள் என்று என் பெரியம்மா அழுது கேட்டிருக்கிறேன். மனிதர்கள் அவர்களுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் சிக்கல்களுக்கு  கடவுளை நம்புகிறார்கள்.விஞ்ஞானம் மருத்துவம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கும் இந்த சூழலிலும் கூட என் கிராமத்தில் உள்ள மக்களுக்கு உடல் சுகக் கேடு என்றால் முதலில் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதும், உடல் நலமில்லாதவர்களை உட்கார வைத்து சாமி எடுத்து அவர்களைச் சுற்றும் முறை இன்றும் உண்டு. தற்போது இது போல் நடப்பது குறைந்திருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதன் வீரியம் அதிகம் இருந்ததை நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். நம்மை மீறி ந