///நான் கலந்துகொண்ட முதல் விஷ்ணுபுரம் விருது விழா இது. இலக்கியத்தில் ஆழப் பங்காற்றிய படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. படைப்பாளிகளும்,வாசகர்களும் உரையாடல் வழியே இலக்கிய படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு அறிவுப் பெருக்கின் களமாக விஷ்ணுபுரம் விருது விழா இருந்தது. தொடர்ந்து வாழ்வை சூழ்ந்து கொண்டேயிருக்கும் அன்றாட சிடுக்குகளைத் தாண்டி சிந்திக்காதவர்கள், பணம்,பொருளீட்டல் வழியே வசதி பெருக்குதலை மட்டுமே வாழ்வின் முதன்மையான கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு சராசரி செக்கு மாட்டு வாழ்வைத் தாண்டிய ஒரு அறிவார்ந்த சமூகத்தை இலக்கியம் வழியாக, உரையாடல் வழியாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன். பதினோரு வருடங்களாக விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழியாக பல்வேறு படைப்பாளிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். கலந்த...