அறம்
///ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து அறம் செய்ய விரும்பு என்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவை. தமிழில் எழுதப்பட்ட நிறைய நூல்கள் மானுட வாழ்வியலுக்கான அறத்தை முன்வைத்தவை. மானுட இனம் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட நல் நெறிகளே அறம். அறமற்ற மனித வாழ்வு அழுக்கானது. சக மனிதனுக்கு ஒருவன் செய்துவிட்ட தீங்கு அவன் மனதை குடையும் குற்ற உணர்ச்சியாய் எழுவதும் ஒருவகையில் அறமே. பிறிதொரு மனிதனுக்காக ஒரு மனித மனம் சுரக்கும் கருணையும் ஒரு வகை அறம் தான். அறம் உள்ள மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உன்னதமாய் இருக்கிறது. சண்டையிடாமல் சாசுவதமாக போராடி இந்தியாவை மீட்ட அண்ணல் காந்தியடிகள் ஒரு அறத்தின் உருவம். ஏழைகளின் துயர் துடைக்க தன் முழு வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்த கருணைக் கடவுள் அன்னை தெரசா ஒரு அறத்தின் உருவம்தான். அப்படி முழுக்க முழுக்க அறத்தை மையமாய் வைத்து அறத்தின் உருவமாய் இருந்த மனிதர்களைப் பற்றி ஜெயமோகனால் எழுதப்பட்டது தான் அறம் எனும் நூல். ஜெயமோகன் அவர்களின் அறம் சிறுகதைத் தொகுப்பு முழுவதும் அறத்தின் உருவமாய் இருந்த உண்மை மனிதர்களை பற்றிய சித்திரத்தை நம் முன் வைக்கிறது. ஒரு எ...