சாயாவனம்
///சா.கந்தசாமியின் சாயாவனம் நாவலை முன்வைத்து எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களை ஜனவரி மாதம் நடந்த சென்னை புத்தக திருவிழாவில் சந்தித்துப் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சா.கந்தசாமியின் படைப்புகளில் தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையும்,இரணிய வதம் சிறுகதையும் எனக்கு நெருக்கமானவை. தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே மீன் பிடிப்பதில் ஏற்படும் மன தன் முனைவை(Ego) எழுத்தில் காண்பித்திருப்பார் சா.கந்தசாமி. தன்னிடமிருந்து பிரிந்து வேறு இடத்தில் ராமு மீன் பிடிக்க தூண்டில் போடுவதிலிருந்தே தாத்தா மாணிக்கத்திற்கு பேரன் ராமு மீது Ego வளர ஆரம்பித்து விடுகிறது. வாளை மீனை தன்னால் பிடிக்க முடியவில்லை என்ற கழிவிரக்கத்தில் தன் மனைவி மீதும்,பேரன் ராமு மீதும் கிழவர் மாணிக்கம் கோபத்தைக் காட்டுகிறார். தான் பிடிக்க முடியாத பெரிய வாளை மீனை ராமு ஒருநாள் பிடித்து விடுவதை அவனுடைய பாட்டி பெருமையாக மாணிக்கத்தை அழைத்துச் சென்று காட்டும் போது மாணிக்கம் ராமுவின் தோள் மீது கை வைத்து மெதுவாக அவரின் கைகள் காது நோக்கி தலையை உரசிச் செல்லும் போது தன்னுடை...