Posts

Showing posts from August, 2024

சந்திர மலை

Image
 சந்திர மலை- விபூதிபூஷண் பாந்தோபாத்யாய எப்படி ஒருவரால் ஆப்பிரிக்க காடுகளை இவ்வளவு உற்று அவதானித்து எழுத முடிந்தது.இது சிறுவர் நாவல் அல்ல.சிறுவன் காட்டில் பயணம் செய்யும் பக்க எண்ணிக்கை குறைந்த இயற்கை தரிசனம் நிறைந்த பேரிலக்கியம். ஆப்பிரிக்க காட்டில் உள்ள குரங்கு வகைகள்,சிங்கங்கள்,மயக்கம் ஏற்படுத்தி பக்கவாதத்தை உண்டாக்கும் ஒருவித விஷ கொடிகள்,கடுப்பு மாம்பா எனப்படும் விஷப் பாம்புகள்,பல்வேறு பழங்குடிகள்,பல்வேறு மலர்கள் என காட்டின் முடிய ரகசியத்தை நம் முன் விரித்துக் கொண்டே செல்கிறது ரிக்டர்ஸ்வெல்ட் மலைத் தொடர். இவ்வளவு சாகசமும்,காடு சார்ந்த பயணமும் கொண்ட ஒரு நாவலை அந்த நிலப்பரப்பின் பூகோள தரவுகளோடும் அந்த நிலக் காடுகளில் வசிக்கும் தாவர மற்றும் வன  ஜீவன்களின் குறிப்புகளோடு எழுதப்பட்டுள்ள இந்த நாவல் சிறுவர் மட்டும் வாசிக்கக் கூடியது அல்ல.ஒரு வங்காள சிறுவன் ஆப்பிரிக்க காடுகளில் வைரம் தேடி அலையும் பயணத்தை உயிர்ப்புள்ளி சுருங்க சாகசம் நிறைந்த ஒரு கதையாக எழுதியுள்ளார் விபூதி பூஷண்.  காட்டில் சாப்பாட்டுக்கு இல்லாமல் குகையில்  மாட்டிக் கொள்ளும் சங்கர் தன்னுடைய Shoe வின் அடிப்பகத...

இலட்சிய இந்து ஓட்டல்

Image
 இலட்சிய இந்து ஓட்டல் விபூதி பூசன் வந்தோபாத்தியாவின் மிகச்சிறந்த நாவல்களில் இலட்சிய இந்து ஓட்டல் முதன்மையானது என்பேன்.ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான நம்பிக்கையின் கதை.அவனைச் சுற்றிய நல்ல மனம் கொண்ட பெண்களின்  கதை. மனதில் எந்தவித மலினமான எண்ணங்களும்,தன்னை அவமானப்படுத்தியவர்களையும்,வஞ்சித்தவர்களையும் வாய்ப்பு கிடைத்தால்  பழி வாங்கலாம் என்ற எந்த மனக் குரோதமும் இல்லாத ஹஜாரியின் பாத்திரம் மனித மாண்பின் உச்சம். உண்மையும்,உழைப்பும்,நேர்மையும் இருந்தால் ஒருவனுடைய பயணமும் லட்சியமும் தடைபடாது என்பதை ஹஜாரி பாத்திரத்தின் வழியாக முன் வைக்கிறார் விபூதி பூஷன். தன்னை மறைத்துக் கொள்ளாமல் எளிமையையும் நேர்மையும் அன்பையும் வெளிப்படுத்தும் மனிதர்களுக்கு நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.தனியாக ஒரு ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஹஜாரியின் லட்சியத்திற்கு பணம் கொடுத்து உதவும் அதஸி(ஜமீன்தார் மகள்),குஸீமா, சுவாஷினி(இடையர் குல பெண்கள்) ஆகிய மூன்று பெண்களின் பாத்திரம் அவ்வளவு அசல் தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. எளிய மனிதர்களின் சின்ன வாழ்க்கையும் சிறிய லட்சியத்தையும் எந்த வித அலங்கார பேச்சும் ஆபரண பூச்சும் இல்...