The Great Indian kitchen

///The Great indian kitchen படம் பற்றிய ஒரு பார்வை குடும்பம் என்பது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு வன்முறையின் வடிவம் என்பேன். குடும்ப அமைப்பின் அதிகார மையத்தின் ஆணிவேராக ஆண் இருக்கிறான்.அவனின் அதிகார நிழலின் கீழ் தான் ஒரு பெண் வாழ வேண்டும் என்ற நியதி இங்கு வகுத்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இரு அதிகார இடங்கள் சமையலறையும்,கட்டிலறையும் தான். படுக்கையறைக்கும், சமையலறைக்கும் இடைப்பட்ட தூர சேவையிலேயே பெண்களின் வாழ்நாள் தேய்ந்து விடுகிறது. திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் தன் கணவனுக்கும்,மாமானாருக்கும் வடித்து கொட்டியும்,அவர்களுக்கு பணிவிடை செய்வதையுமே 1.30 மணி நேரங்களுக்கு மேல் திரையில் காட்டுகிறது "The Great indian kitchen" என்ற மலையாளப்படம். படத்தின் பெரும்பகுதி கேமிராவின் கோணம் சமையலறையையும், சாப்பாட்டு மேசையையும் தாண்டி செல்வதில்லை. சமையலறையை அதுவும் மேலிருந்து கீழாக காட்டும் உயர் கோண கேமிரா காட்சிகள். மாமானார் சட்னியை அம்மியில் அரைக்க சொல்வது,சாதத்தை குக்கரில் வைக்காமல் நெருப்பில் வேக வைக்க சொல்வது,Washing mac...