கிடங்குத் தெரு

///செந்தூரம் ஜெகதீஷ் எழுதிய கிடங்குத் தெரு நாவலை முன்வைத்து ராஜா என்ற 30 வயது இளைஞனின் சுய வாழ்வு பதிவின் வழியே கிடங்குத் தெருவின் மனிதர்களையும்,அங்கு நடக்கும் வியபார நுட்பங்களையும்,அதன் அரசியலையும் பேசும் ஒரு சுய சரிதை வகை நாவல் என்றே கிடங்குத் தெரு நாவலை கூறலாம். என் வாசிப்பனுவத்தில் தனித்த எழுத்து நடையிலும்,மொழி கையாள்கையிலும் என்னை வசீகரித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் என்று சொல்வேன். புதுமைப்பித்தன் எழுத்திலும்,சுந்தர ராமசாமி எழுத்திலும் என் அகம் அடைந்து கொள்ளும் நிறைவை கிடங்குத் தெரு நாவலிலும் நான் அடைந்தேன். இவ்வளவு இலக்கிய அடர்வும்,எழுத்து நடையும் உள்ள எழுத்தாளரான செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்பது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதி இருந்தால் தமிழ் இலக்கிய உலகில் அவருக்கான இடம் மிகப்பெரிதாக இருந்திருக்கும். அதனால் என்ன ஒன்றின் தரத்தையும்,தகுதியையும் தீர்மானிப்பது எண்ணிக்கை அல்ல. சம்பத் இடைவெளி என்ற ஒரு நாவலைத் தான் எழுதினார். பா.சிங்காரம் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகிய இரண்...