///தென்னிந்திய மொழிகளில் கன்னட இலக்கியம் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு கனத்த மரியாதையும், ஈர்ப்பும் உண்டு அது சிவராமகரந்த், எஸ்.எல்.பைரப்பா,விவேக் ஷான்பாக் போன்றவர்களின் படைப்புகளை வாசித்ததின் வழியாக அந்த மரியாதையும் ஈர்ப்பும் எனக்கு ஏற்ப்பட்டது என நினைக்கிறேன். விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதிய "காச்சர் கோச்சர்" என்ற நாவலை தமிழில் கே.நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்திருந்தார். அந்த மொழிபெயர்ப்பு அவ்வளவு ஒரு நேர்த்தியாக,கச்சிதமாக இருந்தது. அது முதல் கே.நல்லதம்பி அவர்களின் மொழிபெயர்க்கும் படைப்புகளை வாசிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்ப்பட்டது. கன்னடத்தில் திருமதி பி.வி.பாரதி எழுதிய தன் வரலாற்றுக் கதையை தமிழில் "கடுகு வாங்கி வந்தவள்" என்ற பெயரில் திரு.கே.நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். கடுகு வாங்கி வந்தவள் எனும் தன் அனுபவ கதை எனும் நூல் திருமதி பி.வி.பாரதி அவர்களுக்கு மார்பக புற்று கட்டி ஏற்பட்டதையும், அதிலிருந்து மீள அவர் அனுபவித்த மன அவஸ்தைகளையும்,அதனைக் கடக்க அவர் உள்மனதுக்குள் அவர் நிகழ்த்திய மனப் போராட்டங்களையும் உண்மைக்கும்,மரணத்துக்கும் அருகில் வ...
Posts
Showing posts from October, 2019
- Get link
- X
- Other Apps

///பூமணியின் பிறகு நாவல் வாசித்து முடித்தேன்.தமிழில் எதார்த்தவாத நாவல் எழுதுபவர்களின் எண்ணிக்கை சொற்பம்.அதில் முதன்மையாகவும், முழுமையான கலைத்தன்மை கைகூடும் படைப்புகளை படைப்பதில் பூமணி முந்தி நிற்கிறார். சக்கிலியக்குடியில் பிறந்த அழகிரி பகடை என்பவனின் வாழ்வின் வழியாக மணலூத்து என்ற கரிசல் கிராமத்தின் மண், அதன் மனிதர்கள், அவர்களின் சாதிய அடுக்குகள், அவர்களின் மொழி, அவர்களின் அன்றாட வாழ்வு முறை என எவ்வித மிகைப்படுத்தல் மொழி அல்லாத ஒரு எதார்த்த வாழ்வியலை நாவலாக நம் முன் நிறுத்துகிறார். வாசிப்பவர்களை எவ்வித உணர்ச்சிகளின் உயரத்துக்கும் கொண்டு செல்லாமல் எழுதுவது தான் பூமணியின் மிகப் பெரிய பலமே.பிறகு நாவலை கூர்ந்து வாசிக்கும் போது அது ஆழமான பல்வேறு தளங்களுக்கு நம்மை இழுத்துச் செல்லுகிறது. நாவல் முழுமைக்கும் பயணிப்பது அழகிரி பகடையின் மீது தான். காவக்காரர் கந்தையாவின் அறிவுறுத்தலின் படி செருப்பு , கமலைச்சாமான்கள் தைத்து தர சத்தியநாதபுரத்திலிருந்து மணலூத்து கிராமத்திற்கு அழகிரியும் அவனது மனைவி காளி,அவனது மகள் முத்துமாரி ஆகியோரும் வருகிறார்கள். அழகிரியின் பாத்திரத்தை அறவுணர்ச்சியும்,...