Posts

Showing posts from October, 2024

ஆக்காண்டி-வாசு முருகவேல்

Image
 ஆக்காண்டி-வாசு முருகவேல் ஈழ இலக்கியம் என்றாலே சிங்களவர்கள்  ஈழத்தமிழர்களை கொன்றொழித்த  இன அழிப்பு குறித்து  மட்டுமே  எழுதப்படும் என்பது எல்லோருக்குமான ஒரு மேலோட்டமான பார்வை. தமிழீழ விடுதலைக்காக உருவான தமிழ் இயக்கங்களுக்கு இடையேயான முரண்கள்,ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த நிலமிழந்து அலையும் அலைகழிப்புகள்,ஓலங்கள்,ஒப்பாரிகள் என நிறைய ஈழ இலக்கியங்கள் சிறுகதை வடிவிலும் நாவல் வடிவிலும் ஷோபா சக்தி,சயந்தன்,குணா கவியழகன் போன்றவர்களால் பாரிய கோணங்களில் எழுதப்பட்டுள்ளது. வாசு முருகவேலின் ஆக்காண்டி நாவல் இலங்கை தமிழ் இஸ்லாமியர்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையேயான முரணைப் பேசுகிறது.சோனகர்கள் எனப்படும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் இலங்கை ராணுவத்துக்கு அனுசரணையாக இருந்து தமிழர்களின் உடைமைகளை அபகரித்து கொடுமைப் படுத்தினார்கள் என்ற தொனியில் நாவல் நிறைய நிகழ்வுகளை பதிவு செய்கிறது. அதிகாரமும் சூழ்ச்சியும் கொண்ட சிங்கள ராணுவம் இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் இன முரணையும் பகையையும் ஊதிப் பெருக்கியது என்பதை நாவலின் மையமாக கொள்ளலாம். நாவலின் 87 வது பக்கத்தில் "இலங்கையின் முப்படை தலைவரையே ...