Velu malayan

///அமர் மித்ராவின் "துருவன் மகன்" நாவலை முன்வைத்து வங்க மொழி கலை,இலக்கியங்களில் எப்போதும் தன்னை உயரத்தில் வைத்துள்ள மொழி.எந்த மண் செழிப்புற்று இருக்கிறதோ அங்கே கலையும்,இலக்கியமும் கூட செழிப்புற்று வளரும். கங்கை நதி பாயும் மண் வங்காளம். ஆங்கிலேய இந்தியாவின் தலைநகராக ஆங்கிலேயர்கள் குடியேறிய மண் என்பதாலும்,மேற்கத்திய மனிதர்களின் காலடிகளையும்,கலாச்சாரத்தையும், அவர்களின் மொழிகளையும் மெல்ல தன்னுள் நுழைத்துக் கொண்ட மண் வங்காளம். பதேர் பாஞ்சாலி என்ற சிறந்த திரைப்படம் மூலம் உலகை இந்திய சினிமா நோக்கி உற்று நோக்க வைத்த சத்யஜித்ரே வங்க மண்ணின் ஒரு வார்ப்பு தான். இந்திய செவ்வியல் இலக்கியங்களில் முதன்மை இடத்தில் வைத்துப் பார்க்கப்படும் படைப்பான "ஆரோக்ய நிகேதனம்" நாவல் வங்க மொழி தந்ததே. கலை,இலக்கியத்தில் கங்கையைப் போல் வற்றாத அறிவுச்செழுமையைக் கொண்ட வங்க மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று புனைவே இந்த துருவன் மகன் நாவல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உஜ்ஜையினி நகரத்தின் நிலத்தை,அதன் மக்களை,அம்மக்களின் அரசனை,அவன் வீழ்ச்சியை அவன் மீது நிகழ்த்தப்பட்ட சூழ்ச்சியை,அந்நிலம் கண்ட ம...