பருவம்

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் கடந்து ஒரு வழியாக 928 பக்கங்கள் கொண்ட பருவம் நாவல் இன்றுடன் முடிந்தது. மனிதர்களின் உணர்ச்சி தருணங்கள்,மனித மனங்களில் படியும் அகங்காரம்,குரோதம்,வன்மம், துரோகம்,பழியுணர்ச்சி உறவுகளின் முரண்கள் என மானுடத்தின் மனப் பேரோலத்தை நம் முன் விரித்து காட்டும் ஒரு பேரிலக்கியம் மகாபாரதம்.எஸ்.எல். பைரப்பா தன்னுடைய பார்வையில் சாதாரண மனிதர்களின் கதையாக மகாபாரதத்தின் கதையை எடுத்துக்கொண்டு அதன் பாத்திரங்களை தன்னுடைய பார்வையில் விவரிக்கிறார். எல்லா நதிகளுக்கும் ஊற்று இமயமலை என்பது போல,எல்லா கதைகளுக்கும் ஊற்று மகாபாரதம் தான்.அது myth ஆகவே கூட இருந்தாலும்.மகாபாரதம் மானுட வாழ்வின் ஆவணம்.