Posts

Showing posts from June, 2020
Image
சயந்தன் எழுதிய ஆதிரை நாவலை முன்வைத்து ///"வரலாறு  அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகிறதோ  அவர்களுடைய விருப்பமானதையும், வேண்டியதையும் மட்டும் சொல்லும்" என்பதற்கு மாறாக ஒரு இனம் நிலமற்று,நிம்மதியற்று, உயிர் பதைக்க இன்னொரு இனத்தால் துரத்தப்பட்ட,சிதைக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் வலியின் வரலாற்றை மக்கள் பார்வையில் ஆதிரை நாவல் பதிவு செய்கிறது. ஈழத்து மக்கள் மீது நிகழ்ந்த இனப்படுகொலைகளின் முப்பதாண்டு மூச்சு முனகலின் வரலாறு ஆதிரை. சிங்கமலை தங்கம்மை,ஆச்சிமுத்து கிழவியின் மூத்த மகன் நடராசன் அவனது மனைவி கிளி,ஆச்சி முத்து கிழவியின் இளைய மகன் சங்கிலி அவனது மனைவி மீனாட்சி,மற்றும் அத்தார்,சந்திரா ஆகிய குடும்பங்களின் மூன்று தலைமுறைகளைப் பற்றிய முப்பதாண்டு வரலாறைப் பேசுகிறது நாவல். இதுவரை ஈழத் தமிழர்கள் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் வரலாறு என செய்தி துணுக்குகள் வழியாக நமக்குள் படிந்து போன அத்தனைக்கும் முற்றிலும் மாறான ஒரு கோணத்தை நமக்கு காட்டுகிறது ஆதிரை நாவல். போரின் படுகளத்தை அப்பாவி மக்களின் பார்வையில்,பெண்களின் அழுகுரலாக,கண்ணீராக காட்டும் ஒரு பேரிலக்கிய வடிவில் எழுதப...